உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

187

அயன்மொழி வளர்ச்சிக்கு அளவிறந்து நீளும் சில வள்ளல்களின் கைகள் தமிழுக்கு முடம்படுகின்றன.

மேற்படி 284.

வை பாவாணர் பட்டறிவின் வெளிப்பாடெனற்கு ஐயமில்லை. இவ்வாறு வேறு சில குறிப்புகளும் காணலாம். 'சிறந்த மனைவி' அவற்றுள் ஒன்று.

சிறந்த மனைவி

சிறந்த மனைவி தன் கணவனுக்கு அறிவுரை கூறுவதில் அமைச்சியாயும் அன்பும் பொறையும் கற்பிப்பதில் ஆசிரியயை யாயும், உடல்நலம் பேணுவதில் அன்னையாயும், வீட்டுக் காரியத்தை நடத்துவதில் கருமத்தலைவியாயும் பணிவிடை செய்வதில் வேலைக் காரியாயும் இருப்பாள்.

அறிந்தார் அறிவிக்க

- கட்டுரை வரைவியல். 109

தஞ்சை ஆபிரகாம் பண்டிதரின் மூத்த மகனாரான சோதிபாண்டியனோடு சேர்ந்து இசைத் தமிழாராய்ச்சி செய்த ஒரு பெருமகனார் தம் மாணவர் பதின்மருடன் சென்ற பொங்கல் திருநாள் என் உறையுள் வந்து ஓர் இசைத்தமிழாராய்ச்சி மன்றம் தோற்றுவித்தார். விடை ஆடவையாகிய சூன்மாதத்திற்குப்பின் வருமாறு சொன்னேன். அவரை உடனே என்னிடம் வரச்சொல்க. அல்லது அவர் முகவரியைத் தெரிவிக்க.

ஈதென்க.

ஞா. தேவநேயன் எசு.பி (S.P) 57, க.க. நகர், சென்னை - 78.

- செந். செல். 54 : 505.

காலம் போற்றிய பாவாணர் கருதியழைக்கும் அழைப்பு

தமிழர் நிலையில் இனிப்பும் கசப்பாதல்

தம்பிறஹந்த நாள் விழாவைக் கொண்டாட விரும்பாதவர் பாவாணர். தம் பிறந்தநாள் மலரோ - இதழோ -வருதல் கூடாது என்பவரும் பாவாணர். தம் வரலாறு வெளியிட வேண்டா என மறுப்பவரும் பாவாணர். எனினும் அவர் பிறந்தநாள் விழா தனித் தமிழ்ப்பற்றாளர்களால் - அமைப்புகளால் - ஆங்காங்கு எடுக்கப்