உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

பட்டே வந்தன. அப்படி எடுக்கப்பட்ட இடங்களுள் ஒன்று தென்னார்க்காடு மாவட்டத் தேவ பாண்டலம். உ.த.க. சார்பிலேவிழாநடை பெற்றது. விழா நிறைவில் அவ்வூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இனிப்பு வழங்க முயன்றனர். ஆனால் ஆங்கிருந்த தமிழினத் தலைமையாசிரியர் இனிப்பு வழங்குதலை மறுத்து விட்டார். இது தமிழ்மேல் கொண்ட கசப்பா? பாவாணர் மேல் கொண்ட

கசப்பா!

உ.த.க. வினர் கண்டித்துக் 'கைகாட்டிக்கு' எழுது மளவுக்கு வந்தது செய்தி!

3. அறிதலும் ஆய்தலும்

ஆட்சிச் சொற்குழு

நாடு விடுதலை பெறுதற்கு முன்னரே 1940 இல், விடுதலை பெறும் நாட்டில் தமிழ் ஆட்சிமொழியாதல் வேண்டும் என்னும் ஆர்வத்தால் அதற்கு அடிப்படையாம் ஆட்சிச்சொல் அகரவரிசை இயற்றக் கழக ஆட்சியாளர் திரு.வ.சு. விரும்பினார். அதன் ஆய்வுக் குழுவில் பெரும் பங்கு கொண்டு கடனாற்றிய பெரு மக்களுள் ஒருவர் பாவாணர். மற்றையோர் காழி சிவ. கண்ணுசாமியார், க.ப. மகிழ்நர், கீ. இராமலிங்கனார். சொற் பட்டியை ஆட்சிச்சொல் அறிஞர் இராமலிங்கனார் அணியப் படுத்தியிருந்தார். அச் சொற்களை மேலாய்வு செய்து, வேண்டும் திருத்தங்கள் அமைத்துத் தந்தது ஆய்வுக்குழு. தமிழ் ஆட்சி நடைபெறுதற்குரிய கால்கோள் நிகழ்ச்சியில் பங்கு கொண்டவர் பாவாணர் என்பது விளங்கும்.

இவ்வாறே சென்னை மாநிலத்தமிழ்ச் சங்கம் எடுத்துக் கொண்ட கலைச்சொல்லாக்கக் குழுவிலும் பங்கு கொண்டு கடனாற்றியவர் பாவாணர். கலைச் சொல்லாக்கம் எனத் தொடக்க நிலையிலேயே செல்வியில் கட்டுரை எழுதிய பாவாணர்க்கு இப்பணி கைவந்த கலைப்பணியாவதுடன், கரும்பு தின்னும் விரும்புறு பணியும் போல்வதாம்.

தமிழ்ச்சொல்லாக்க மன்றம்

பல்வேறு துறைகளிலும் இதுகாறும் செய்யப்பட்டுள்ள கலைச்சொல்லாக்கங்களை மதிப்பிடுதற்கும் புதிய சொல்லாக்கங்