உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

189

களை அவ்வத்துறைகளோடு தொடர்புபடுத்தித் தமிழ்வளர்ச்சியை விரைவுபடுத்தற்கும் நிறுவப்பட்டது இச்சொல்லாக்க மன்றம்.

மொழிஞாயிறு ஞா. தேவநேயப்பாவாணர்

துணைத்தலைவர்கள்

ஆட்சிமொழிக் காவலர் கீ. இராமலிங்கனார்

ஆட்சிமொழித் திறவோர் கோ. முத்துப்பிள்ளை

மன்றச்செயலாளர்

பேராசிரியர் இரா. மதிவாணனார்

இம்மன்றத்தின் தோற்றம் 17-7-80 அண்ணா சாலை நடுவண் மாவட்ட நூலகத்தில் நிகழ்ந்தது.

கலைச்சொல் வடிவு

செந்.செல்.54: 606

கோவை, தொழிற்செல்வர் புதுப்புனைவாளர் கோ. துரைசாமி பாவாணர்மேல் மட்டற்ற அன்பர். ஒருபோது தம் தொழிலகத்திற்கு வந்த பாவாணரிடம் துள்ளுந்து உறுப்பு களுக்குத் தமிழ்ப்பெயர் வினவி இருக்கிறார். துள்ளுந்து உறுப்பு ஒவ்வொன்றனையும் பிரித்துக்காட்டி அதன் ஆங்கிலப்பெயர் சொல்லச் சொல்ல அனைத்திற்கும் தமிழாக்கச் சொல் எந்நூற் குறிப்புமின்றிப் பாவாணர் வழங்கினார். இரண்டு மணிப் பொழுதில் துள்ளுந்து உறுப்புகள் அனைத்துக்கும் தமிழ்ச்சொற்கள் படைத்துத் தந்து விட்டார் என்றால், அவரை முறையாகப் பயன்படுத்தியிருந்தால் தமிழ்ச் சொல் இல்லை என்னும் தட்டுப்பாடு நேர்ந்திருக்குமா?

அறியாமை

என்னைப் பணியில் அமர்த்துமாறு தமிழன்பர் வேண்டின், எனக்கு ஏதோ நன்மைசெய்யச் சொல்வது போல் அதிகாரிகள் கருதுகின்றனர். அது, தமிழுக்கே நன்மை என்றறியும் ஆற்றல் அவர்கட்கில்லை. இது அவர்களது தமிழறியாமையையோ தமிழ்ப்பற்றின்மையையோ தான் காட்டும் என்கிறார் பாவாணர்.

மண்டைக்கனம்

புலவர் பெருமிதம் 'மண்டைக்கனம்' அன்று புலவர் வறுமையைப் பயன்படுத்தி அவரை அடக்கியாளத் துணிவது