உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

ஆதி மொழிஎன் அருமைத் தமிழென்றே

ஓதி உலகுக் குணர்த்திடவே - தீதின்றி ஆவன செய்பே ரறிஞர் அண்ணாமலையின் தேவநே யப்பாவா ணர்.

தமிழில் தமிழ்சார்ந்த கன்னடந் தெலுங்கில் அமைகேரளந்துளுவில் ஆர்வம் - கமழ்கின்ற ஆங்கிலத்தில் ஏனை அயல்மொழியில் வல்லுநர்எப் பாங்கிலுளர் பாவாணர்போல்?

வடமொழியும் இந்தியும்மற்றும் வடக்கில்

படுமொழிகள் என்ற பலவும்- தடவியே

அந்தமிழே ஆதிஎன்னும் தேவநே யர்தாம் எந்தமிழர் எல்லார்க்கும் வேந்து.

என்தமிழிற் கொஞ்சம் இருந்ததெலுங் கிற்கொஞ்சம் பின்ஆங் கிலத்திலே பிஏயும்-நன்குடையேன் என்றுமொழி வார்போல் இல்லைநம் பாவாணர் பன்மொழிவல்லார்இந்தப் பார்க்கு.

பன்மொழியில்வல்லரென்று பைந்தமிழர் நாவினிலே இன்னும் சிலபேர் இருக்கின்றார் - அன்னவர்கள் நாட்டுக்குச் செய்ததென்ன? நம்தமிழை மாற்றலர்க்குக் காட்டிக் கொடுக்கும் கயவு.

வீணாள்ப டாதுதமிழ் மேன்மையினைக் காட்டுவதில் வாணாளை ஆக்கும்பா வாணர்க்கு - நாணாமல் அல்லல்விளைக்கும் அயலார்க் கடியார்கள் இல்லாமல்இல்லை இவண்.

நாவலந் தீவுக்கு நந்தமிழே தாயென்று கூவும் அதுவுமோர் குற்றமா? - பாவிகளே தேவநே யர்க்குச் செயுந்தீமை செந்தமிழர் யாவர்க்கும் செய்வதே யாம்.

திக்கற்ற செந்தமிழ்த்தாய் வெல்கவே வெல்கென்று மெய்க்குழைக்கும் தொண்டர்மன்ம வேகவே - வைக்கும் தடிப்பயல் யாவனே தப்புவான்? அன்னோன்

நடுத்தெருவில் நாறும் பிணம்.