உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

புண்ணானால் நெஞ்சம் தமிழுலகு பொன்றுமென்று அண்ணா மலைப்பல் கலைக்கழகம் - இந்நாளில் தேவநே யர்க்குத் திருத்தொண்டு செய்ததென்க யாவரும் ஏத்தும் படி.

வாழ்நதாலே நாம் வாழ்வோம் வாழாளேல் நாம்வாழோம் தாழ்ந்த தமிழகத்தில் செந்தமிழ்த்தாய் -ஆழ்ந்தாழ்ந்து பாராது பாவாணர்க் கின்னல் புரிவதனால் வாராது வாழ்விற் புகழ்

எந்தமிழ் மேலென்ற உண்மை எடுத்துரைப்போன் செந்தமிழன்! செந்நெற் பயன்மழை! - தந்தமிழின் கீழறுப்போன் கீழோனே! தேவநே யர்வாழ்க! வாழிய செந்தமிழ் மாண்பு.

பாவாணர் இரங்கல் பதிகம்

217

பாவேந்தர்; குயில் 3 : 10; 23 -8-60.

கண்ணீர் வற்றிக் கடல்வற்றி - நீள்

கடலின் அருகில் ஊற்றெடுக்கும்

உண்ணீர் வற்றி உலகளிக்க - மேல் உலாவும் மேகத் திரள்வற்றித் தண்ணீர் பற்றித் தரைமுழுதும் - செந்

தணலே பற்றித் தீய்த்ததுவே ஒண்ணீர் அறிவுப் பாவாண - நான் உனையே பிரிந்த போழ்தினிலே!

கண்கள் இருண்டு காதழன்று

காலும் சோர்ந்து கையற்று

மண்கொள் மலைகள் இடிந்துருண்டு - என்

மண்டை யழுத்த வளிதிக்கித்

திண்கொள் நெஞ்சம் அறக்கிழிந்தே - எண்

திசையும் அரத்தம் பாய்ந்ததுவே

பண்கொள் நாவின் பாவாண – நீ

படுக்கை சாய்ந்த போழ்தினிலே!

தசையும் காய்ந்து கரியாகி - மெய்த்

தண்டும் நரம்பும் பொடியாகிப்