உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

பசையும் உருகி நெய்யாகிச் - செம்

பாலும் கவர்ந்து வளியாகிப்

பெரும்பிரிவும் பேரிரங்கலும்

பிசையும் நெஞ்சக் குலைவெடித்துச் - சாப்

பேய்க்குக் களமாய்ப்போயினவே

வசையில் இசைசேர் பாவாண - நீ

வானம் புகுந்த போழ்தினிலே!

நிலமும் வெந்து நீறாகி - மண் நீரும் கொதித்து வளியாகிப் பொலமொண் தீயும் புகையாகி - வான் போழும் வளியும் வெளியாகிப் புலமெண் டிசையும் கிடுகிடுக்க - ஐம் பூதத் தூழி ஆர்த்ததுவே அலமார் நெஞ்சில் பாவாண - நீ

ஆக்கை கழன்ற போதினிலே!

தமிழே தொகைந்து கருவாகித் - தீந்

தமிழே புகுந்துள்ளுயிர்ப்பாகித்

தமிழே புலனாய்ப் பொறிகளுமாய்த் - தாய்த்

தமிழே உருவாய் உலாவந்து தமிழே புகட்டி ஒளிதந்தாய் - பின்

தவிர்ந்தாய் வெற்றுச் சருகானோம் தமிழாய் வாழ்ந்த பாவாண் - நீ தமிழாய்ப் பொலிந்த போழ்தினிலே! ஒளிசேர் விழியும் சுடர்நுதலும்- நல்

உரஞ்சேர் நெஞ்சும் தமிழ்நினைவும்

வளிவார் முடியும் நரைதலையும் - உயர் வல்லென் மூளைக் கொழுந்திரளும் அளிசேர் தமிழ்தோய் ஆருயிரும் - ஓர்

அணுவாய் அணுவாய் உட்கரைந்தே

வெளிசேர்ந் தனவோ பாவாண - நீ விண்ணில் ஏறிய போழ்தினிலே!

சோலை நிழல்போல் குளிரன்பும் - உயிர் சோரா துயர்த்துந் தெள்ளறிவும்