உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

காலை ஞாயிறு போலெழுந்து - தமிழ்க் கதையாய்ச் சொன்னாய்; கதைநிறுத்திப் பாலை நடுவில் எனைவிடுத்தாய் - உள் பதைப்புற் றுயிரும் சிதைந்ததுவே வாலை அறிவுப் பாவாண் - நீ

வாழ்க்கை துறந்த போழ்தினிலே!

பொன்னார் மாடத் திருக்கோயில் - நின்

புலனால் சமைத்துத் தமிழணங்கை மின்னேர் இறைமைத் திருவுருவாய் - ஒளி மிளிரச் செய்தே வழிபட்டாய்! உன்னோர் அழுங்க ஊரழுங்க - என்

உயிரும் உடலும் ஒருங்கழுத

என்னேர் ஆவிப் பாவாண - நீ

எனையே தவிர்ந்த போழ்தினிலே!

உலவல் மறந்தாய் ஊண்மறந்தாய் - உன்

உறவே வாழ்வென் றுவந்ததுணைக் குலவல் மறந்தாய் குளிமறந்தாய் - புதுக் கூறை வாங்கும் நிலைமறந்தாய்! கலவல் தமிழ்க்கே தனித்தமிழ்காண் - ஒளி

காழ்க்கும் நினைவின் பாவாண! பலவல் லின்பம் மறந்தாயே - நீ

பாயல் மறந்த போழ்தினிலே!

வேட்கும் தமிழே விளைவாகிச் - சொல்

விளைக்கும் தொழிலே வாழ்வாகித் தோட்கும் துண்டைப் போர்த்தாமல் - ஒரு

துறவியைப் போலும் மனங்கொண்டே

நாட்கும் மணிக்கும் உழைப்பெடுத்தாய் - யாம்

நலிந்தோம் மெலிந்தோம் செந்தமிழை

மீட்கும் முயல்வில் பாவாண - நீ

மீளாத் துயில்காண் போழ்தினிலே.

219

தென்மொழி மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்

நினைவிதழ். 17:6-7;