உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. நினைவகங்களும் நிலைபேறும்

பாவாணர் தமிழ்க்குடும்பம்

நெய்வேலி அன்பர் த. அன்புவாணர்க்கு ஓர் ஆர்வம்; "தமிழர் ஒன்றுபட்டுக் கடனாற்றுவதில்லை. முதற்கண் தம் உள்ளும் புறமும் ஒன்றுபட்டுக் கடனாற்றாமையுடன் குடும்ப உறுப்புகள் ஒன்றுபட்டும் கடனாற்றுவதில்லை, அம்முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்" என்பது. அதனைத் தம் உள்ளொத்த அன்பர்களுடன் உறவாடி, ஒத்த உணர்வுடைய சில குடும்பங்களை இணைத்துத் 'தமிழ்க்குடும்பம்' என்னும் பெயரில் ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் என முயன்றார். அம்முயற்சி ஆய்வில் 'தமிழ்க்குடும்பம்' என்னும் பொதுப் பெயரினும் மொழி - இன நாடு - தழுவிய வகையில் வழிகாட்டுவார் ஒருவர் பெயரிணைப்பு இருத்தல் சாலுமெனப் பல்வேறு ஆய்தல்களுக்கு டையே நிறைந்த ஒருமித்த முடிவாகப் "பாவாணர் தமிழ்க்குடும்பப் பெயர் தோற்றமுற்றது.

and

'துணைவன் கொண்ட கொள்கையைத் துணைவி யேற்கவும், துணைவியின் உணர்வைத் துணைவன் மதிக்கவும் அவற்றை மகள் கடைப்பிடிக்கவும் தனி நிலையிலும் குடும்ப நிலையிலும் ஒவ்வொருவரும் மொழி இன நாட்டு வளர்ச்சிக்கு உண்மையில் பயன்படச் செய்யும் பண்பாட்டு அமைப்பே பாவாணர் தமிழ்க் குடும்பம்" என்பது குடும்ப அமைப்பு விளக்கம், பாவாணர் பெயரைத் தேர்ந்து அமைப்புக்குச் சூட்டு

வானேன்?

கிறித்தவராய் இருந்தும் தமிழராய் வாழ்ந்தவர். தம் மக்கட்கெல்லாம் மங்கையர்க்கரசி மணிமன்றவாணன் போன்ற தமிழ்ப் பெயர்களையே சூட்டியவர். தம் வாழ்வையே தன்னல மின்றித் தமிழ்க்காக ஈகம் செய்து தமிழாராய்ச்சியில் மூழ்கியவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகள் வழியைப் பின்பற்றித்