உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

திருமணச் சீர்திருத்தம் என்னும் முப்பகுப்புகளும் பின்னிணைப்பு மாக 96 பக்கங்களையுடையது. சேலம் கூட்டுறவு அச்சகத்தில் அச்சிடப்பட்டுள்ளது. இந்நூலாசிரியரின் ஏனை நூல்கள் (வெளிவர விருப்பவை) என 20 நூற்பெயர்கள் உள. அவற்றுள் தமிழர்மதம், தமிழ நாகரிகமும் பண்பாடும், தமிழர் வரலாறு, திருக்குறளும் தமிழ் மரபுரையும் என்னும் நான்குமே பின்னே வெளிவந்தன. எஞ்சியவை எழுதத்திட்டப் படுத்தியவை ஆகலாம். பழமொழி பதின்மூவாயிரம் எழுதி முடித்தும் இழந்த நூலாயிற்று. தொல்காப்பியம் தேவநேயம் என்பது அவர் உரைகாண எண்ணியதாகலாம்)

தமிழர் மதம்

தேவநேயன் எழுதியது

நேசமணி பதிப்பகம்

முதற்பதிப்பு: 15 நவம்.1972 உரிமை : ஞானமுத்து தேவநேயன்.

அச்சகம் : மறைமலை அச்சகம்.

(காட்டுப்பாடி விரிவு 2003, கன்னி, 7. (23-9-1972) தேவநேயன். இது முகவுரையீறு. கோவை இராமசாாமிக் கவுண்டர், அவர் மைந்தர் நித்தலின்பனார், மறைமலை அச்சக உரிமையாளர், மெய்ப்புத் திருத்தாளர், முல்லைவாணன் ஆகியோர்க்கு நன்றி யுரைக்கிறார் : நன்கொடையாளர் பெயர்ப்பாவும் நன்கொடைத் தொகையும் குறிக்கப்பட்டுள. முன்னுரை குமரிநிலையியல் இடை நிலையியல் நிகழ்நிலையியல் வருநிலையியல் முடிபுரையியல் பின்னிணைப்புகள் ஆகியவற்றுடன் நூல் 200 பக்கங்களால் யல்கின்றது. கடவுளை நாடாமல் உண்டென நம்பு என நம்புமதம் என்பதை முகப்பு வெண்பாவிலேயே சுட்டுகிறார். மதம் சமயம் மதம் தேன்றியவை மூவகை மதம் குமரிநாட்டு மதநிலை என்பவை முன்னுரைப் பொருள்)

தமிழர் வரலாறு

தேவநேயன் எழுதியது

நேசமணிபதிப்பக வெளியீடு

உரிமை: ஞானமுத்து தேவநேயன். முதற்பதிப்பு : பெப்.1972.