உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

243

(காட்டுப்பாடி விரிவு, 17, சுறவம், 2003 (31, சனுவரி, 1972) தேவநேயன் - என்பவை முகவுரை நிறைவு. 1929 ஆம் ஆண்டில் சீநிவாச ஐயங்கார் தெற்கினின்று தொடங்கித் தமிழ் வரலாறு வரைந்துவிட்டாரேனும் அது ஆங்கிலத்தில் இருப்பதனாலும் போதிய அளவு மொழிநூற்சான்று காட்டாமையாலும் இவ்வரலாற்று நூலை வரையத் துணிந்தேன்” என்று நூலெழுது கரணியம் முகவுரையில் குறிக்கிறார். மதுரைமணிவிழாக் குழுவினர், கோவை இராமசாமிக்கவுண்டர் அவர் மகனார் நித்தலின்பனார், புன்செய்புளியம் பட்டி மறைமலையடிகள் மன்றத்தார் பாராட்டப்படுகின்றனர். முன்னுரை 25 பக்கங்கள், தனிநிலைக் காண்டம் கலவுநிலைக் காண்டம் தெளிநிலைக் காண்டம் என நூல் முக்காண்டங்கள்; பின்னிணைப்புகள் 2. ஆக 382 பக்கங்களைக் கொண்டுளது.)

தமிழின் தலைமையை நாட்டும் தனிச்சொற்கள்

செந்தமிழ்ச் செல்வியில் வேர்ச் சொற் கட்டுரைகள் வெளிவந்த பின்ர்த் தொடராக வெளிப்பட்டது இவ்வாய்வுக் கட்டுரைகள் சிலம்ஸப 52; பரல் 1 இல்இத்தொடர்தோன்றியது (செப். 1977) உம்பர், உய், உருளை, அரத்தம், கண், காந்து, காலம், கும்மல், அந்தி, எல்லா, கலித்தல், மகன், மன், தெய்வம், புகா (உணா), பள்ளி, பாதம், புரி, பொறு, என்பன (19) சிலம்பு 54; பரல் 2 வரை (1979 அக்) வெளிவந்தன. பின்னர்த் தமிழினத் தலைமையை நாட்டும் தொகுதிச் சொற்கள் என்னும் தலைப்பில் பூனைப் பெயர்கள் என்பது வந்தது (54:3) மீண்டும் தொடர்ந்து பகு, பேசு என்னும் தனிச்சொற்கள் (54:4;5) வெளிவந்தன. இவை இது காறும் தனிநூலாக்கம் பெற்றில. வெளிவரின் வேர்ச் சொற்கட்டுரைகள் போலச் சிறக்கும்.

கழக வெளியீடு: 899.

திரவிடத்தாய்

முதற்பதிப்பு: ஆசிரியர் 1944 சனவரி

1

மறுபதிப்பு கழகம் 1956 மே.

திரு.ஞா.தேவநேயன். முன்னுரை, மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளு, முடிவு என்னும்ஆறு பகுப்புடையது. பக். 112.)