உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

திருக்குறள் தமிழ் மரபுரை

தேவநேயன் எழுதியது

நேசமணி பதிப்பகம், காட்டுப்பாடி விரிவு.

உரிமை : ஞானமுத்துதேவநேயன். முதற்பதிப்பு : திசம்பர் 1969.

(மேலைத்தாம்பரம் சென்னை 45, 18, கன்னி, 2000 (4-10-1969) ஞா. தேவநேயன் முகவுரை நிறைவில் உள்ளவை. பரிமேலழகர் வழுவியுள்ள வழிகள் பன்னிரண்டனைச் சுட்டுகிறார். தம் உரை திருந்தியுள்ள வகைகள் ஐந்தனை விளக்குகிறார். தாமரைச் செல்வர் சுப்பையா, இராசிபுரம் சேயோன், ஆரணிச் செல்வராசன், பாரி அச்சக நாராயணர் ஆகியோர் பாட்டாலும் உரையாலும் முகவுரையில் பாராட்டப்பட்டுளர்.நன்றியுரைப் பகுதியில், அன்னத்தாளக ஆசிரியன் முருகன், புலவர் கந்தசாமி ஆகியோர் ஈராயிரத்திற்கு மேல் தந்த தொகையும், திருச்சிநகர்கல்லூரி மாணவர் விடுத்த திங்கட்பணவிடையும், இந்திய நாட்டுவைப்பகக் கணக்கர் முத்துக்கிருட்டிணர் விழுப்பமிகு விருந்தேம்புதலுடன் மெய்ப்புத் திருத்தியமையும் சுட்டப் படுகின்றன. நூன்முன்னுரை 34 பக்கங்களால் இயல்கின்றது. நூலுரை (35-726) முடிந்தபின் பின்னிணைப்பும் (727 - 812) விரிகின்றது. 24 பின்னிணைப்புகளில் இறுதியது திருவள்ளுவர் ஈராயிரவாட்டை விழாச் செய்தி. அது 108 அடியான் அமைந்த அகவல்; பறம்புக்குடியில் உ.த.க. முதன் மாநாட்டில் வெளியிடப்பட்டது. வெளியீட்டு நிகழ்ச்சி தென்மொழியில்விரிவாக வந்தது).

தொல்காப்பியக் குறிப்புரை

1944-இல் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியம் வெளியிட்டது. நூற் பாக்களிலும் உரைகளிலும் மாணாக்கர் விளக்கம் பெறவேண்டிய பகுதிகளின்மேல் தக்க ஆராய்ச்சிக் குறிப்புகளும் விளக்கங்களும் மேற்கோளிடங்களுடன் அவ்வப் பக்கத்தின் அடிக்குறிப்பு வரைந்தவர் பாவாணர். குற்றியலுகரம் உயிரீறே என்பதொரு கட்டுரையும், உரையாசிரியர் உரையொடு நச்சினார்க்கினியர் உரை வேறுபடும் இடங்களும் பாவாணர் வரைந்துளார்.