உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

245

தொல்காப்பியச் சொல்லதிகாரச் சேனாவரையருரைப் பதிப்பு கந்தசாமியாரால் செய்யப்பட்டது. (1923) அதன் மறு பதிப்பில் (1946) பாவாணர் விளக்கக் குறிப்பு வரைந்தார்.

தொல்காப்பியத்திற்கு

உரையெழுத விரும்பியவர்

பாவாணர். அது நிறைவேறியமை அறியக் கூடவில்லை.

பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

நேசமணியம்மையார் நினைவு வெளியீடு 2.

-

பண்டித புலவ கலைத்தலைவன் ஞா. தேவநேயன். (சேலங் கல்லூரி மேனாள் தமிழ்ப்பேராசிரியன்) எழுதியது.

1966.

(முகவுரை இருபக்கம். காட்டுப்பாடி, க, சுறவம் 1997. ஞா.தே. செட்டிகுளத்துப் பாவாணர் நூல் வெளியீட்டுக் குழு உதவியால் வெளிவந்தது. மெய்ப்புப் பார்த்த அருணாசலம் என்னும் நல்லிறையனைப் பாராட்டியுள்ளார். முன்னுரை (1-23) நூல் 1. பண்டைத் தமிழ நாகரிகம் (24-195) பண்டைத் தமிழப் பண்பாடு (196-225) பின்னிணைப்பு, நூல் வெளியீட்டுக்குழு ஆக 240

பக்கங்கள்).

கழகவெளியீடு: 613

பழந்தமிழாட்சி

முதற்பதிப்பு பெப். 1952

சேலங்கல்லூரித் தமிழ்த் திணைக் களத்தலைவன், பண்டித புலவ வித்துவ ஞா. தேவநேயன், எம். ஏ, எழுதியது.

உரிமை : D. அன்னபூரணம்.

முகவுரை : சேலம் 13-12-1951. ஞா.தே.

(இந்நூல் முகவுரையின் இறுதியில் "என்றும் திருத்தம் யம்பும் அறிஞரின், நன்றி யறிவேன் நனி" எனக் குறட்பா வொன்றுளது. அரசியல் உறுப்புகள் தொடங்கி அரசர் முடிவு ஈறாக 26 தலைப்புகளில் (பக்.158) நூல்இயல்கின்றது. பின்னிணைப்பு நான்கு குறுந்தலைப்பினது (159-170). இந்நூலில் முதற்கண் பதிப்புரை இருபக்கங்கொண்டுள்ளது).