உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

மண்ணில்விண் அல்லது வள்ளுவர் கூட்டுடமை

மேனாள் சேலம் நகராட்சிக் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவன் ஞா. தேவநேயன் எழுதியது.

நேசமணிபதிப்பகம்

முதற்பதிப்பு:1-4-1978

உரிமை : ஞானமுத்து தேவநேயன் பதிப்பாளன் : தே. மணி

(காட்டுப்பாடி விரிவு 31-8-1973; ஞா. தேவநேயன் என்பது முகவுரையீறு.என் தந்தையார் ஓர் அரசியல் அலுவலராயிருப்பதால் இதைத் தாமாக வெளியிட இயலவில்லை. அதனால் நானே வெளியிடுகின்றேன் என்பது பதிப்பாளன் முகவுரை. கி.பி. முதல் நூற்றாண்டிலேயே உலகுக்குத் தக்க உயரிய கூட்டு உடைமையாட்சி திருவள்ளுவரால் தெரிவிக்கப்பட்டு விட்டது என்பதை விரிவாக எழுதியதே இந்நூல். நெய்வேலி உத.க. அன்பர் பொருளுதவியால் நூல் வெளிவந்தது. முன்னுரை முப்பத்தாறு பக்கத்துடன் நூல் வள்ளுவர் கூட்டுடமை, தமிழ்நாட்டு அரசின் கடமை, தமிழ்நாட்டு அரசின் தனிக் கடமை, நடுவணரசின் கடமை, உலகக்கூட்டரசு, முடிவுரை என்னும் ஆறு பெரும் பகுப்புகளும் சேர்த்து 250 பக்கங்களைக் கொண்டுள்ளது).

முதல்தாய்மொழி அல்லது தமிழாக்கவிளக்கம் கழக வெளியீடு: 631

முதற்பதிப்பு : சனவரி 1953

ஆசிரியர் பண்டித புலவ வித்துவ

ஞா. தேவநேயன் எம்.ஏ.

உரிமை : D. அன்னபூரணம்.

("இதனை ஆக்கித் தந்த மெய்ப்பொருள் காணும்பேரறிவு படைத்த புலவர்திரு. தேவநேயனார்." என்பது பதிப்புரைச் சுட்டு. பாவாணர் முகவுரை இறுதியில் "பகுத்தறிவைச் சற்றும் பயன் படுத்தார் கல்வி, மிகுத்ததினால் ஏது பயன்?" என வினாவும் குறட்பாவொன்று இணைத்துள்ளார். குறிப்பொலிக் காண்டம், சுட்டொலிக் காண்டம் என இரு காண்டங்களும் இயல், துறை