உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

247

என்னும் உட்பிரிவுகளும்கொண்ட இந்நூல் 344 பக்கங்களை

யுடையது.

வடமொழி வரலாறு

மேனாள் சேலம் நகராட்சிக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியன், மதுரைப்பண்டிதன், நெல்லைப் புலவன், சென்னைப் புலவ (வித்துவ)கலைத் தலைவன் (எம்.ஏ.) ஞா. தேவநேயன் எழுதியது.

நேசமணி பதிப்பகம். முதற்பதிப்பு : திச. 1967

உரிமை : ஞானமுத்து தேவநேயன்.

முகவுரை : இடம் நாள் ஒப்பம் ; காட்டுப்பாடி 20, நளி, 1998(6-12-67) ஞா.தே.

நூல்

(இந்நூலும் திருச்சி மாவட்டப் பாவாணர் வெளியீட்டுக் குழுவின் செங்கைப் பகுதியர் உதவியால் வெளிவந்ததாகும். முன்னுரை, ஐம்பத்து நான்கு பக்கங்களுடன், நூல்மொழியதிகாரம், இலக்கண வதிகாரம் இலக்கிய வதிகாரம் தமிழ் மறைப்பதிகாரம் முடிபதிகாரம் என்னும் ஐந்ததிகாரமுமாக 350 பக்கங்களைக் கொண்டது. மொழியதிகாரம் மிகவிரிந்தது (55- 295) தனி அகர முதலியாக அமைந்தது. அக்கம் தொடங்கி வைகையில் முடிகின்றது. முடிபதிகாரம்பதினாறு வெண்பாக்ளைக் கொண்டது. வடமொழி தெய்வ மொழியென்றால், தமிழ்மொழி தெய்வத்தின் தெய்வத் திருமொழி என்று ஐந்தாம் வெண்பாவில் கூறுகிறார். பகுத்தறிவின்றி மிகுத்தறிவு பெற்றுப் பயனில்லை என்பதை, காளவாய் கற்றை கற்றையாய்த் தின்றாலுமி நல்லறிவு பெற்றிடுமோ என உவமையால் கூறுகிறார் (11).

வண்ணனை மொழி நூலிடன் வழுவியல்

'இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?' என்னும் நூலில் உள்ளது போன்றே ஆசிரியர் பட்டங்கள் குறிக்கப்பட்டுள. உரிமை ஆசிரியரது.

முதற்பதிப்பு 1968.

(காட்டுப்பாடி விரிவு, 12 மடங்கல் 1999 (28-8-1968) ஞா.தே. என்பவை முகுவுரையில் இடம் பெற்றுள்ளவை. மொழிநூல்,