உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

வண்ணனை மொழிநூல், உலகத்தமிழ்ப் பேரவைகள் என்னும் முப்பெருந்தலைப்புகளும் 16 உட்டலைப்புகளும் கொண்ட. இந்நூல் 122 பக்கங்களால் இயல்கின்றது. இப்பொத்தகம் கிடைக்கும் இடங்கள் என ஐம்முகவரிகள் இறுதி அட்டையில் உள. வெள்ளைக்காரர் சொல்வதெல்லாம் விழுமிய அறிவியல் என்பது குருட்டுத் தனமான கருத்து என்றும், மொழிநூல், உலகின் முதன் முதல் இலக்கணம் இயற்றப்பெற்ற தமிழில் தோன்றிய தென்றும், அறுகிழமை அல்லது முக்கிழமை பயிற்சி பெற்ற அளவான் வண்ணனை மொழிநூல் அறிஞராக ஒருவர் ஆகிவிட முடியாது என்றும் முகவுரையில் கூறுகிறார். கழக ஆட்சியாளர் வ.சு. உதவியையும் பாராட்டுகிறார்).

வேர்ச்சொற் கட்டுரைகள்

கழக வெளியீடு:1469

பண்டித புலவ (வித்துவ) கீழைக்கலைத் தேர்ச்சியாளன் ஞா. தேவநேயன், எம்.ஏ.,

நூலுரிமை : ஞா.தேவநேயன்.

முதற்பதிப்ஸப : மார்ச்சு 1973

க.

(பதிப்புரை (கழகம்) அணிந்துரை (பேராசிரியர் அன்பழகன்) ஆசிரியன் முகவுரை ஆகிய மும் முன்னுரைகளை நூன்முகப்பில் கொண்டுள்ளது. இக் கட்டுரைகள் செந்தமிழ்ச் செல்வியில் வெளிவந்தவை. அவற்றில்சில திருத்தங்கள் பெற்று நூலாக்கம் பெற்றமையைப் பதிப்புரை சுட்டுகின்றது. "பாவாணர் இயற்றிய ஒப்பியன் மொழிநூல்தான் எம்போல்வார் பலருக்கும் தமிழ்ப்பகையையும் அதன்மறை நிலையையும் கண்டு கொள்ளுதற்குத் துணை செய்தது" என்று அணிந்துரை கூறுகின்றது. கருத்து வேறுபடும்போது சொல் வேறுபடல் வேண்டும். அன்றேல், பொருள் மயக்கம் உண்டாவதோடு மொழியும் வளர்ச்சியுறாது. இதுவே சொல்லாக்க அடிப்படை நெறிமுறை என்கிறது ஆசிரியன் முகவுரை. உயிர்முதல் வேர்ச்சொற் கட்டுரைகள் பதினைந்தும், உயிர்மெய் முதல் வேர்ச் சொற்கட்டுரைகள் பதினாறுமாக முப்பத்தொரு கட்டுரைகளைக் கொண்ட இந்நூல் 298 பக்கங்களை யுடையது.)

The Primary Classical Language of the world.