உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

அறிவுக்கு, வணங்கிய வாயினர்; உண்மைத் தொண்டை உரையாலும் பாட்டாலும் உள்ளார்ந்த உவகை ஊற்றெடுக்கப் பாராட்டும் ஒள்ளியர்; தக்காரை ஊக்கித் தகவுணர்ந்து மதிக்கும் தண்ணியர்; ஆசிரியர் தொல்காப்பியனார்க்குப் பின்னே அருந்தமிழ் இலக்கணத் திணையிலாக் குரிசில் இவரே என்ன இலங்கிய பெற்றியர்!

'தமிழர் தொன்மையை உலகிற்கு அறிவித்தவர் கால்டுவெல் பெருமகனார்; தனித்தமிழ்ககு வித்திட்டவர் பரிதிமாற் கலைஞர்; செடியாகத் தழைக்கச் செய்தவர் நிறை தமிழ் மலையாம் மறைமலையடிகள்; நானே மரமாக வளர்த்து வருகிறேன்' எனத் தம் வர்த்த பணியின் சீர்த்தநிலையை நுண்ணிதின் உணர்ந்து செம்மாந்து கூறிய செந்நாவலர், சொற்பிறப்பியற் பணிக்கென்றே தம்மை இறைவன் படைத்தனன் என் உளங்கூர்ந்துரைத்து, அப்பணிக்கே தம்மை முழுதுற ஒப்படைத்து உழைத்த உரவோர்;

-

பாவாணரைப் பற்றிய மதிப்பீடுகளுள் ஈதொன்று.

"மொழிஞாயிறு மறைந்தது; தமிழ்க்கதிரவன் தலைசாய்ந்து விட்டான்; செந்தமிழுலகம் இருண்டது! தொல்காப்பியர் திருவள்ளுவர் ஆகிய பெருமக்களுக்குப் பின், தமிழ் மொழியின் மேலும் அதன் வரலாறு இனம் ஆகியவற்றின் மீதும் அடர்த்துப் போர்த்து நின்ற அறியாமைக் காரிருளைத் தம் அறிவாண்மையால் அடித்து விரட்டிய தனித்தமிழ்க் கதிரவன், ஒளிப்புலன் ஞாயிறு, செம்புலச்செம்மல் ஞா. தேவநேயப் பாவாணர் என்னும் தீந்தமிழ்ப் பேரொளிக் கோளம் தன் ஆய்புல அறிவுக் கதிரைச் சுருக்கிக் கொண்டு சாவெனும் பேரிருளில் தன் அறிவியக்கத்தை ஒடுக்கிக் கொண்டது! நேரக்கூடாதது நேர்ந்து விட்டது; நடக்கக் கூடாதது நடந்தே விட்டது! தென்புல மக்கள் தங்கள் வாழ்வு நலன்களை நாடிச் சிறிது சிறிதாக முன்னேறுவதற்குத் தன் தெள்ளிய அறிவாலும், ஒள்ளிய ஆய்வுத்திறனாலும் பேரொளி உமிழ்ந்த பெருங்கதிர் ஞாலம் இறுதியில் மறைந்தே விட்டது! தமிழின வாழ்வில் ஒரு பேரூழி தோன்றி, இருந்து, தலைமறைந்து விட்டது!

தொல்காப்பியனுக்கில்லாத தொகைச்சொல் அறிவும், திருவள்ளுவருக்கில்லாத தீந்தமிழ் வரலாற்றறிவும் தேவநேயமாய் முகிழ்த்துத், தமிழினம் தவற விட்ட மொழித் தடங்காட்டி,

1.செந்தமிழ்ச்செல்வி : சிலம்பு, 55; பரல்.6; பக். 245-6; 1981 பெப்ரவரி.