உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

15

வழிநடை தோற்றிப் புது வரலாறாய்ப் புதுக்கிக் கொடுத்த ஊழிப்பேரொளி ஒரு நொடியில் காலவெள்ளத்துள் கட்புலன் படாது கரைந்து விட்டது. இனி இருள்! இருள்! எங்கும் இருள்! பாவாணரைப் மதிப்பீடுகளுள்

மற்றொன்று.

பற்றிய

இது

"உலகின் முதற் செம்மொழியாகிய தமிழ் மொழியின் தொன்மை, முன்மை, நுண்மை, திண்மை, எண்மை, ஒண்மை, இனிமை, தனிமை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, மும்மை, செம்மை, இயன்மை, வியன்மை ஆகிய பதினாறு பண்புகளையும் மறைத்தும் திரித்தும் மழுப்பியும் குழப்பியும் வரும் மேலை ஆரிய மேய்ப்பர்களுக்கும் 'கீழையாரிய' ஏய்ப்பர்களுக்கும் அறைகூவல் விடுக்கும் நிறைநூற் பெரும் புலவர்!

ஒப்பிலக்கணம் கண்ட கால்டுவெலாரையும் மிஞ்சி, தப்பிலக்கணம் கூறும் ஆரியப் புல்லரும் அஞ்ச - மொழியியல் ஆணிவேருக்கும் மூலம் காட்டி, வரலாற்றியலில் சல்லிவேரையும் கல்லிக் காட்டும் மொழி யாராய்ச்சி மூதறிஞர்!

நல்லமரத்துப் புல்லுருவிகட்கும், சாரத்தை உறிஞ்சி ஈரத்தில் முளைத்த காளாம்பிகட்கும், பயிரை மேயும் வேலிகட்கும்- இலக்கணங்களாய்த் திரிந்திழியும் இற்றைத் தமிழகக் கூலிப் புலவர்கட்கிடையே மொழித் தூய்மைக்கும் னக்காப்பிற்கும் வழிகாட்டியாய் உலவும் வல்லரிமா!

குறைமதியர் தேக்கிவைத்த கறையிருளை நீக்கவந்த

மறைமலையார் வழிவந்தநிறைமலையார்!

தன்மதிப்பின் கொடுமுடியாய், தன்னுரிமை முகில் இடியாய், ஆர்த்திலங்கும் சீர்த்தியினார்!

நன்றி கொன்ற தமிழினத்தின் பன்றித் தனத்தால் புகழ் மறைக்கப்பட்டும், புறந்தள்ளப்பட்டும் குமைந்த ஈகஎரி! அமைந் தொளிரும் குடவிளக்கு!

மடமைத் தமிழரின் அடிமைத் தனத்தால் மிடிமை

வாய்ப்பட்ட கடமைக் காவலர்!

1. தென்மொழி. சுவடி. 17; ஓலை 6-7; பக்கம் 5-6; சனவரி - மார்ச்சு 1981.