உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

அவர்தாம் நம் திராவிட மொழியியல் ஞாயிறு திரு. ஞா. தேநேயப் பாவாணர்!

-

-பாவாணரைப் பற்றிய மதிப்பீடுகளுள் இஃதின் னொன்று.

இம்மூன்று மதிப்பீடுகளும் மூவேறு மாதிகைகளில் வெளிவந்தவை. மூன்றும் பாவாணரொடு தொடர்புடையவை. முன்னது, பாவாணரை இதழாசிரியர் கூட்டத்து முதன்மை உறுப்பினராகக் கொண்டது; அடுத்தது, பாவாணரைத் தன் சிறப்பாசிரியராகக் கொண்டிருந்தது; இறுதியது, பாவாணர் திறம் பரப்ப எழுந்தது!

முன்னது, அடிநாள் தொட்டு முடிநாள்காறும் பாவாணர் 'அறிவம்'தாங்கி வந்த பெற்றியது.

அடுத்தது, பாவாணரை அரிய இயக்கமாக்கிப் பளிச்சிட

வைத்தது.

இறுதியது, பாவாணர்க்கு விழாக்கோலங்காட்டி விழுப்பம்

சேர்த்தது.

முன்னிரு மதிப்பீட்டுரைகளும் பாவாணர் மறைவின் இரங்கலில் எழுந்தவை. பின்னொரு மதிப்பீட்டுரையும் பாவாணர் வாழும் நாளில், "பாவாணர் என்பவர் யார்?" என வினாப்பறை எழுப்பி விளக்கமுறுத்தக் கிளர்ந்தது.

முதலது, இவ்வரலாற்றின் நூலாசியரால் வரையப் பெற்றது. அடுத்தது, பாவலரேறு பெருஞ் சித்திரனாரால் காட்டப்

பெற்றது.

இறுதியது, பேராசிரியர் தமிழ்க் குடிமகனாரால் நாட்டப்

பெற்றது.

அறிவின் இலக்கணம், “நுண் மாண் நுழை" புலம் என்பது! இம்மூன்றும், பாவாணர் நுண்மாண் நுழைபுலம் சுட்டுவன!

1. அறிவு மலர் 1; இதழ் 3; பக்கம் 5; 18-10-1970.