உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

அப்பொழுதில் புரிவியல் வெல்லும்! அதுவரை தெரிவியல் அளவில் அமையும்!

திரு.வி.க.தம் வாழ்க்கைக் குறிப்பில் தம் வாழ்வின் வெற்றி தோல்விகளைத் தொடக்கத்திலும் நிறைவிலும் ஆய்ந்து, 'அந்தண்மையாம் செந்தண்மை நிறைந்தமையையே வெற்றி எனத் தெளிவிக்கிறார், அவ்வகையால், பாவாணர் கொண்ட கொள்கைகள் அவரால் வலிவாகவும் பொலிவாகவும் நிலை நிறுத்தப்பட்ட துடன், தடை கிளர்த்துவார் உரையையெல்லாம் தவிடு பொடியாக் கியதை அறிவார், பாவாணர் வெற்றியைப் பளிச்சிடக் காண்டல் உறுதியாம்.