உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. பிறப்பும் கல்வியும்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கோயில் பட்டிக்கும் சங்கரன் கோயிலுக்கும் இடையில் தோக்கசு (Stokes) என்ற மேனாட்டுக் கிறித்தவக் குரவர் தொண்டாற்றியிருக்கிறார். அவர் இருந்தது வாகைக்குளம் என அறிய வருகின்றது. பின்னாளில் அவர் கோயில்பட்டியிலும் தங்கியுள்ளார். அவர்தம் வளமனைக் காவலராக இருந்தவர் முத்துசாமி என்பார்; அவர்தம்

மனைவியார் வள்ளியம்மாள் என்பார்.

முத்துசாமி சங்கரன் கோயிலில் இருந்து நெல்லைக்குச் செல்லும் சாலையில் உள்ள பனைவடலி என்னும் ஊரினர்; அவ்வூரிலும் அடுத்தடுத்துள்ள தேவர்குளம், குருக்கள்பட்டி என்னும் ஊர்களிலும் உறவு உடையவர். அவர் தோக்கசின் வளமனைக் காவலராகிய பின்னர், அவரையும் அவர் மனைவி யையும் கிறித்தவ ராக்கியிருக்கிறார் தோக்கசு. உறவினர்கள் தம் சமயத்திலேயே அழுந்தி நின்றமையால் தொடர்பு சுருங்கலாயிற்று.

முத்துசாமி-வள்ளியம்மாள் இல்வாழ்வின் பயனாக ஓர் ஆண குழந்தை பிறந்தது. அக்குழந்தை பிறந்த சின்னாளிலே தந்தையும் தாயும் அடுத்தடுத்து இறந்து விட்டனர். பெருங்குணம் வாய்ந்த தோக்கசு, அக் குழந்தைக்குத் தந்தை பெயருடன் வளர்ப்புத் தந்தையாம் தம் பெயரையும் இணைத்து ஞானமுத்து தோக்கசு எனப்பெயரிட்டு வளர்த்தார். உரியபருவத்தில் பள்ளியில் சேர்ப்பித்துப் படிக்கவும்வைத்தார்.

ஞானமுத்து தோக்கசு கல்வியில் கருத்துடையவராக இருந்தமையால், இளவயதிலேயே ஆசிரியத் தகுதி பெற்றார். சங்கரன் கோயிலில் இருந்த தொடக்கப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக அமர்ந்தார்; அப்பள்ளிக்குப் பக்கத்தில் இருந்த களப்பாளங்குளம், பெருங்கோட்டூர் முதலிய இடங்களில் இருந்து வந்தும் பிள்ளைகள் அவரிடம் பயின்றனர். ஆசிரியப் பணியில் சிறந்த ஞான முத்தருக்கு அவர் உறவிலேயிருந்த சொக்கம்மாள் என்னும் பெண்ணைத்திருமணம் செய்விக்கத் தோக்கசு ஏற்பாடு