உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

செய்ய வேண்டும். அச்சிட்டமாநாட்டு அழைப்பு ஒவ்வொரு புலவர்க்கும் தனித் தனிவரும். சென்னைக்கு 100 அனுப்புவோம். நீங்களே பகிர்ந்து விடவேண்டும். மாநாட்டுக்கு முன் கலைச் சொல்லாக்கம் பற்றிஒன்றும், தமிழிசை பற்றி ஒன்றும்ஆக இரு கூட்டம் இங்கு நடைபெறும். அருணகிரிநாத அடிகள் கட்டாயம் மாநாட்டுக்கு வரவேண்டும். உடன் பதில்.

ஞா. தேவநேயன்.

மொழிக்காவலில் கடுந்தொண்டாற்றிய பாவாணர் அத் தொண்டொடு கூடியதும் அதற்குப் பொலிவும் வலிவும் ஊட்டுவதும் தாம் உலகுக்கு நிலை நாட்டக்கருதியது மாகிய "திராவிட மரபு தோன்றிய இடம் குமரி நாடே" என்னும் இடு நூலை (Thesis) எழுதிப் பல்கலைக் கழகத்தில் 'M.O.L' பட்டத்திற்காகத் திருச்சிக் காலத்தில் தான் ஒப்படைத்திருந்தார். 13-11-35 இல் அவ்வாய்வில் அமிழ்ந்துள்ளதாக எழுதும் பாவாணர், 11-2-36இல் அவ்விடுநூல் பல்கலைக்கழகத்தால் தள்ளப்பட்டமையை உரைக்கின்றார். மேலும் "இது எனக்கு வியப்பாக இல்லை. இற்றைத்தமிழ்நிலை என்ன என்பதை மட்டும் தெரிவிக்கின்றது” என்கிறார். அன்றியும், "இனிமேல் இந்தியாவிற்குள் எனக்கு ஒரு தேர்வும் இல்லை. ஆகையால்எனது நூல்களையெல்லாம். ஒவ்வொன்றாய் வெளியிடப்போகிறேன்" என் முடிவெடுக்கிறார்! இம்முடிவே செம்முடிவாயமை மேலும் மேலும் விளக்கமுறும்'

திருச்சிப்புத்தூர் ஈபர் மேற்காணியார் உயர்நிலைப் பள்ளியில் பாவாணர் தமிழாசிரியராக இருந்தபோது மறைமலை யடிகள் தாம் இயற்றிய தமிழர் மதம் என்னும் நூற்படி ஒன்றனை அன்பளிப்பாக விடுத்து, அதுபற்றிய பாவாணர் ஆய்வுைைய இந்துத்தாளுக்கு எழுதுமாறு சொன்னார். பாவாணர்மதுரைப் பண்டிதத் தேர்வு தேறியபின் பத்தாண்டுகள் ஆங்கிலத்தை முற்றும் புறக்கணித்ததால் தம் ஆங்கிலப் பேச்செழுத் தாற்றலைப் பெரிதும் இழந்திருந்தமையால் அடிகள் விருப்பத்தை நிறைவேற்ற விரும்பியும் இயலாமற் போயினார். இதனைப் பின்னாளிலும் வருந்தி எழுதியமை (மண்ணில்விண். 176) அவர்தம் அந்நாள் துயர் மிகுதியை நன்கு வெளிப்படுத்தும். திருவள்ளுவர்க்குப் பின் தோன்றிய ஒப்பற்ற புலவர் அடிகளே என்னும் பாவாணர்க்கு அவர் வேண்டுகையை நிறைவேற்றாமை எளிய துயராமா? மறைமலையடிகளார். தம்மை மதித்த மதிப்பீட்டுச் சான்றாக மற்றொரு சான்றும் பாவாணர்குறிக்கிறார்: