உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(4

பாவாணர்

51

'ஒரு தமிழ்ப்புலவர் ஒருகால் தம் தவறான சொல்லா ராய்ச்சியொன்றைக் கூறியபோது, அது பொருத்தமன்றென மறுத்துரைக்க, 'அஃது' என் ஆராய்ச்சியென்று அப்புலவர் பொய்த்தபின், 'அங்ஙனமாயின் நான் அதை ஏற்றுக் கொள்கிறேன்' என்று திருவாய் மலர்ந்தார்களாயின் அவர்கள் என்னை மொழி நூற்றுறையில் எத்துணை மதித்திருந்தார்கள் என்பதை அறிந்து கொள்க" என்கிறார். (தென்மொழி 7:9:12)

அடிகளாரைச் சுட்டிக்கூறாத ஒருநூல் பாவாணர் இயற்றி ல்லை என்பதே, அவரை மதித்தமதிப்பைப் புலப்

யவற்றுள் படுத்துமே!

"யான் திருச்சிப்புத்தூர் ஈபர்கண்காணியார் உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியனாயிருந்த பொழுதே திருவையாற்று அரசர் கல்லூரித் தமிழ்மாணவர் விருப்பத்திற்கிணங்கி அங்குச் சென்று நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் குற்றியலுகரம் உயிரீறே என்று நிறுவினேன். அதன் பின்னர்த் தமிழ்நாடு முழுமைக்கும் பயன்படுமாறு ஒரு கட்டுரையும் வரைந்தேன் என்கிறார் பாவாணர் (தென்மொழி 3 : 11 : 21)

"வரும் ஞாயிறு கரந்தைத் தமிழ்ச்சங்க ஆட்டை விழாவில் 'தமிழாக்க மரபு' என்னும் பொருளிலோர் சொற்பொழிவு நிகழ்த்துவேன்" என்கிறார் (17-1-38)

மன்னார் குடியில் பாவாணர் வருந்தி உழைத்துத் தேடிய தமிழ்த்திரு, திருச்சித் தமிழ்த் தொண்டொடு கூடிப் பரிமணத்தல் இவற்றால் விளங்கும்.

6-7-43 இல் கழக ஆட்சியாளர்க்குப் பாவாணர் ஒரு வேண்டுகை விடுக்கிறார் :

"அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எனக்கு வேலையும் கிடைக்கவில்லை. பதிலுமில்லை. தற்போது வெற்றி மாளிகையில் போர்ப்பாடலாசிரியன் வேலைக்கு வேண்டி யிருக்கிறேன். திரு. முஆ.பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடற்றுறையில் மாகாணத் தலைவர். அவர்களுக்கும் ஒரு திருமுகம் எழுதியிருக்கிறேன். அவர்கள் மனம் வைத்தால் 100 ரூபாய்க்கு எனக்கொரு வேலை கொடுக்கலாம். அன்பு கூர்ந்து உடனே அவர்களிடம் சென்று யாப்புத் திறனையும் பாடுமியல்பையும் எடுத்துச் சொல்லி ஒருவேலை கிடைக்கச் செய்க. தற்போது எனது வருவாய்