உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

போதாமல் வருந்துவதோடு தமிழ் முன்னேற்ற முயற்சியும் தடைப்படுகிறது" என்பது அது. அப்பணி கிட்டாதுபோனது. அதனால் கழக ஆட்சியாளரும் பர். இராசமாணிக்கனாரும் வேறொரு முயற்சியில் இறங்குகின்றனர் என்பதை மேலே அறியலாம்.

1934 முதல் 1943 வரையாகிய ஒன்பதாண்டுத் திருச்சி வாழ்வில்,C.447, மதுரை வீரன் கோயில் தெரு, புத்தூர்; 74, அக்கிராகாரத் தெரு, புத்தூர்; 8, புத்தூர் மந்தை; 1896, புதுத்தெரு, புத்தூர்; 9, பிஷப்குளம் காலனி, புத்தூர் என்னும் ஐந்து இல்லங்களில் பாவாணர்குடியிருந்தமை கிடைத்துள்ள கடிதங் களால் புலப்படுகின்றது. இவ்வில்லங்கள் வாடகை இல்லங்களே எனச் சொல்ல வேண்டுவதில்லை.

"காலமெல்லாம் தனித்தமிழ்க் கொள்கையினால்குறைந்த சம்பளம் பெற்றுவந்தேன். இன்று தான் இறுதிக் காலத்தில் சம்பளம் சற்று உயர்ந்திருக்கின்றது. இன்னும் குடியிருக்க வீடில்லை; பொத்தகம் வாங்கப் பணமில்லை" என 22-8-77 இலும் வரைகின்றார்! திருச்சிக் காலத்தைச் சொல்ல வேண்டுமா?

திருச்சியில் இருந்து.1943-கல்வியாண்டு தொடங்கிச் சென்னை முத்தியாலுப்பேட்டை உயர் நிலைப் பள்ளிக்குச் செல்கிறார். இச் செலவு பாவாணரே விரும்பி மேற்கொண்டார் என்று தோன்றவில்லை. என் அண்ணாமலநகர்வாழ்க்கை என்பதில் பண்டாரகர் (Dr) அரசமாணிக்கனாரின் பரிந்துரையும் தமிழ்ப்பெருமகன் (C.D.) நாயகம் அவர்களின் தமிழ்ப் பற்றும் அற்றைப் பள்ளியாளுங்கணத்தாரின் தமிழ் உணரச்சியுமே கரணியம்" என அவ்விடத்து வேலை கிடைத்தமையைக் குறிக்கின்றார். ஆனால், சைவ சித்தாந்தக் கழக ஆட்சியாளர் வ.சுப்பையா அவர்களும் பண்டாரகர் அரசமாணிக்கனார் அவர்களும் பாவாணர் அப்பள்ளிக்கு வருதல் வேண்டும் என்று வலியுறுத்தியமையாலேயே திருச்சியில் இருந்து சென்னைக்குச் சென்றார் என்று கடிதங்களால் தெரிகின்றது. ஒருமனத்தராய்த தாமே விரும்பி முடிவு செய்யாமல் புறப்பட்டு விட்டார் என்று கருதுமாறே செய்திகள் கிட்டுகின்றன; பாவாணர் விரும்பி எழுதிய ஊதிய மிக்க வேல வேறு; இவர்கள் அமைத்துத் தந்த வேலை வேறு என்பதால் இந்நிலை எனத் தெளிவாகின்றது.