உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

53

உங்களுக்கும் நண்பர் இ.மா. அவர்கட்கு என் மீதுள்ள பற்றினால்65 ரூபாயானாலும்ஏற்றுக் கொள்ளச் சொல்கிறீர்கள். தற்போது அங்கு வருவதால் ஏற்படும் வசதிக் குறைவும் முட்டுப்பாடும் கொஞ்ச நஞ்சமல்ல. இப்போது 1ரூ கொடுத்து வசதியான வீட்டில் இருக்கிறேன். அங்கு இத்தகைய வீட்டிற்கு 35ரூ கொடுக்க வேண்டும். சிறு வீட்டில் என் பொருள்கள் அடங்கா. அரிசித் திண்டாட்டம் நினைப்பினும் வருத்துகின்றது. பையன்கள் பல பள்ளிகளில் அமர்ந்து படிக்கிறார்கள். அங்கு வந்தால் புதுப் புத்தகம் வாங்கிப் புதுப் படிப்புத் தொடங்கவேண்டும். இங்கு வாங்கிய புத்தகம் வீண். தவணையிடையில் இடைமாறினால் தவணைச் சம்பளம் கட்ட நேரும். என் மருமகன் ஒருவன் இங்கு 5ஆம் பாரத்தில் இலவசமாய்ப் படிக்கிறான். அங்கு வந்தால் அது நீங்கும்."

"தற்போது புகைவண்டியில் ஓர் ஆடவனுக்கே இடமில்லை. குடும்பத்தோடும் கைக்குழந்தையோடும் வர எங்ஙனம் இயலும்? இங்குள்ள நண்பர்கள் போக வேண்டாமென்று தடுக்கிறார்கள். உயர்நிலைப்பள்ளி தானே என்றும் அங்கத்து 70ரூ இங்கத்து 50ரூ என்றும் சொல்கிறார்கள், அது உண்மைதானே!

"எனக்குச் சென்னைக்கு வர விருப்பம்தான்; ஆனால் விலை மிகுந்தும் பொருள் கிடையாத காலத்தில் எப்படிக் குடும்பத்தோடு வரமுடியும்? என்றாலும், தாங்கள் விருப்பத்திற்கிசைந்து மேலாளர் வாயிலாப் இன்றை அஞ்சலுக்கு விண்ணப்பம் விடுத்துவிட்டேன். 70 ரூபாய்க்குக் குறையாது பார்க்க. முக்கியமான வேலையிலேயே போதிய வருமானம் வரவேண்டும். பிற முயற்சியும் செய்து பிழைப்பது நன்றன்று. குறிப்பு; தற்போது 5-க்குள் ஓர் அறை பார்க்க. எதிர்க்கடையில் சாப்பிடலாம்" என 16-7-43 அஞ்சலில் எழுதியுள்ள செய்திகளால் பாவாணர் நிலை தெளிவாகி விடுகின்றது. 24-7-43 இல் வரைந்த மற்றொரு கடிதத்தில் மேலும் தெளிவாவதுடன் அற்றை நாள் தமிழாசிரியப்பணி நிலையும் நன்கு விளக்கமாகின்றது.'

“அமர்த்தாணை வந்தவுடன் சம்பளம் இங்குள்ளது தானே' என்றார்கள். பின்பு, முத்தையால் பேட்டைப் பள்ளியில் உயர்ந்த சம்பளத் போடுவார்கள் அதன்படி என்றார்கள். பின்பு, 3மாத அறிவிப்பாவது 3 மாத சம்பளமாவது கொடுக்க வேண்டும்

திட்டம்

கொடுக்கமாட்டார்கள்'