உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

என்றார்கள். இவர்கள் சொல்கிற சம்பளத்திற்கு உடனே ஆள் கிடைக்கவில்லை. ஆகையால் இராமராவ் என்னும் சின்னப் பண்டிதரையே பெரிய பண்டிதராக்கச் சொல்லி யிருக்கிறேன். அவரும் போகிறதாக அறிவிப்புக் கொடுத்திருக்கிற தினால் 5ரூ கொடுத்தால் இருக்கிறேன் என்கிறார். மேலாளர் 48 வரை வந்திருக்கிறார். இன்னும் 2 கூட்ட வேண்டுன்ெறு சின்னவர் சொல்கிறார். அவரது பழைய சம்பளம் 40 இம்மாத இறுதிக்குள் ஏதேனும் ஒழுங்காகும். வருகிற வெள்ளியிரவு புறப்படலாம் என்றிருக்கிறேன். துணி ஒரு பெட்டியும் முக்கியமான புத்தகம் ஒரு பெட்டியுமாக இருபெட்டிகள் கொணர்வேன்”

உயர்நிலைப்பள்ளி அளவில் மிகுதியான காலம் ஓரிடத்துப் பணியாற்றியது திருச்சி பிசப்பு ஈபர் பள்ளியேயாம். அங்கிருந்தும் வலியுறுத்தலால்தான் சென்னைக்குச் சென்றிருக்கிறார் என்பதை அறிந்தோம். அங்கும் ஒரோ ஓர் ஆண்டே (1943-44) பணியாற்றி யிருக்கிறார். திரவிடத்தாய் அக்காலத்தில் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வழியே வெளிவந்துள்ளது.

'சைலன்ஸ்' என்னும் சொல்லை, ஆசிரியர்கள் வகுப்பினுள் நுழையும் போது சொல்லும் வழக்கம் ஆங்கு இருந்ததாம். தமிழாசிரியர்களும் அவ்வாறு கூறுவதே வழக்கமாம். ஆனால் பாவாணர் வகுப்புள் புகுந்தமுதல்நாளே அமைதி என்றாராம்! வகுப்புக்குக் காணாததைக் கண்டது போலவும், கேளாததைக் கேட்டது போலவும் ஆயிற்றாம்! ஆங்கில வரலாற்றில் எட்கார் என்பார் வரலாற்றைப் படித்த மாணவர்கள், அவர் தம் படத்யுைம் பாவாணர் தோற்றத்தையும் ஒப்ப நோக்கி வியந்து 'அமைதியை விரும்பும் எட்கார்' எனப்பட்டப் பெயரிட்டனராம். இது முத்தியாலுப் பேட்டை நிகழ்ச்சி.

21-10-1943 இல் சென்னைத் தொண்டை மண்டல உயர்நிலைப் பள்ளியில், சைவசித்தாந்தக் கழகச் சார்பில் முதலாம் தமிழ் உணர்ச்சி மாநாடு நடைபெற்றது. அம் மாநாட்டுத் தலைமை கொண்டவர் பண்டிதமணி கதிரேசனார். உணர்வு மிக்க உரையாற்றியவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் திரு.கு. கோதண்ட பாணியாரும் பாவாணருமாவர். 1933 திசம்பர் 23, 24 ஆம் நாள்களில் சென்னைப் பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் நிகழ்ந்ததும், மறைமலையடி களாரால் புறக்கணிக்கப் பட்டதுமாகிய தமிழன்பர் மாநாட்டுக்குப்