உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

பற்றாளர்களால்

55

பின்னர், தனித்தமிழ்ப் கூட்டப்பட்ட மாநாடாகும் இது. இம்மாநாடு பின்னே வெவ்வேறிடங்களிலும் நிகழ்ந்துள்ளது.

பாவாணர் இங்குப்பணியாற்றிய இக்காலத்திலே தான் தொல்காப்பிய எழுத்து சொல் பதிப்புகளுக்குக் குறிப்புரையும் ஆய்வுரையும் எழுதியுள்ளார். இப்பதிப்புகள் கழகத்தின் வழி வெளியிடப்பட்டவை. செல்வியில் கட்டுரைகளும் இக் காலத்தில் நிரம்ப எழுதியுள்ளார்.

முத்தியாலுப் பேட்டை உயர்பள்ளித் தலைமை யாசிரியராக அந்நாள் இருந்தவர் ஞா.இலக்குமணசாமி என்பார். அவர் கிறித்தவக் கல்லூரியில் பயின்றவர். அவர்க்குத் தமிழாசிரியராக இருந்தவர் பரிதிமாற் கலைஞர். அதனால் தமிழ்ப்பற்றுமிக்க பாவாணரொடு அன்பால் பழகியிருக்கிறார்: நெருங்கி அளவளா வியும் இருக்கிறார். அத்தகையதொரு வேளையில்,"ஐயா, பரிதிமாற் கலைஞன் என்னும் சூரிய நாராயண சாத்திரியார் எனக்குக் கிறித்தவக் கல்லூரியிற் கலையிளைஞன் (B.A.) வகுப்பில் தமிழ் கற்பித்தபோது, பிராமண மாணவரையும் வைத்துக் கொண்டு, பிராமணர் தமிழரை ஏமாற்றிவிட்டனர் என்று சொன்னாரையா!" என்று கூறியது இன்றும், இன்று சொன்னது போன்றே இருக்கிறது" என்கிறார் பாவாணர் (செந்.செல். 55:150)

சென்னையில் இருந்து அவ்வாண்டின் நிறைவிலேயே வெளியேற விரும்பினார்பாவாணர். அவர்தம் வாழ்வில் பசுஞ் சோலை எனத்தக்க நிலையை உருவாக்கிய சேலம் நகராண்மைக் கல்லூரி வேலை வாய்த்தது.

4. போது

சென்னையில் இருந்து சேலம் சேர்ந்ததும் சென்னை வேலையால் நேர்ந்த நேர்ச்சியையும், சேலத்துப் புகுந்த நிலையையும் ஓரஞ்சலில் தீட்டுகிறார்:

சென்ற ஆண்டு சென்னை வேலையை ஒப்புக் கொண்டதால் 2 நிலைப்பேழைகளையும் சில அரிய நாற்காலிகளையும் விற்று விட்டேன். இன்று அத்தகையவை வாங்க முடியவில்லை.

இங்கு வந்தவுடனே தலைவர் அவர்களிடம் ரூ.30 கடன் வாங்கி, 16 உடல் நலத்தகுதித் தாளுக்கும், 4 செருப்புக்கும், 3