உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

மேலாடைக்கும் செலவாய்விட்டது" (13-8-44) என்பது அது. இதில் தலைவர் என்பவர் நகராட்சித்தலைவர்; சேலம் நகராட்சிக் கல்லூரித் தாளாளராகவும் திகழ்ந்த இரத்தினசாமியார். அந்நாள் கல்லூரிமுதல்வர் இராமசாமியார்.

எத்தனை எத்தனையோ கல்லூரிகள் தமிழகத்தில்உள; எத்தனை எத்தனையோ முதல்வர்களும் உளர். எனினும் உயர்நிலைப் பள்ளிகளிலே உழன்ற என்னைக் கல்லூரிக்கு அழைத்து உயர்வளிக்கும் பண்பாட்டைக் கற்றவர் இராமசாமி ஒருவரே என்று பாராட்டுகிறார் பாவாணர்.

இடைநிலைக் கல்லூரியாக இருந்த நகராட்சிக் கல்லூரியை உயர்த்தி மேனிலைக் கல்லூரியாக்கி இராமசாமியை முதல்வராக நிலைபெறுத்திக் கொண்ட பெருந்தகையர் இரத்தினசாமி; இவ்விராமசாமியே தாம் செய்த தமிழ்த் தொண்டுக்குப் பெருந்துணையாக இருந்தவர் எனப்பல நூல்களில் பல படப் பின்னாளில் பாராட்டியுள்ளார்; பதிகமும் பாடியுள்ளார் பாவாணர். நகராட்சித் தலைவர், கல்லூரி முதல்வர்ஆகிய இருவருடன், அந்நாள் நகராட்சி ஆணையராக இருந்த கீ. இராமலிங்கனாரும் தாம் கல்லூரிப் பணியேற்க உதவியதும். சுட்டியுள்ளார் பாவாணர். ஆகலின், பொறுப் பாளர்கள் அனைவரும் விருப்பாளர்களாக அமைந்து அரவணைத் துள்ளனர்.

தமிழ்ப்பற்றும் தமிழினப் பற்றும் தமிழ்வளர்ச்சித் தொண்டும் ஒருங்கே கொண்ட முதல்வர் இராமசாமியார் பாவாணர்க்கு எவ்வளவு மிகுதியாக ஓய்வு தந்து நூலாய்வுக்கு உதவமுடியுமோ அவ்வளவும் தாமே கருதிக் கருதிச் செய்திருக்கிறார். மாலைப் பொழுதுகளில் தம் இல்லத்திற்கு உடனழைத்துச் சென்று விருந்தோம்பி இனிதின் அளவளாவியும், உடனாகி உலவச் சென்றும் உவப்பளித் திருக்கிறார். பொருட்கவலை முதல் எக்கவலையும் பாவாணர்க்கு வராமல் புரந்திருக்கிறார். இவ் வெல்லாவற்றினும் மேலாகப் பாவாணர் புகழ் பரப்புநராகவும் திகழ்ந்திருக்கிறார். இவற்றால் மகிழ்ந்த பாவாணர்,

<

“சேலங்கல்லூரி சிறந்திராம சாமியின்றேல்

ஞாலம் பரவுதமி ழாராய்ச்சி - நூலியற்றும்

தேவநே யன்எங்கே? தென்மொழித் தொண்டெங்கே? பாவுதமிழ் மீட்பெங்கே யார்.”