உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

57

எனப் பாடியிருக்கிறார். இராமசாமியார்மேல் பாவாணர் பாடிய பதிகப்பாடலுள் ஈதொன்று (தமிழ் வர 298) அப்பசுமைப் பன்னீரியாண்டையும், பைந்தமிழ் முதல்வர் பரிவையும் பின்னாளில் எண்ணிப்பார்க்கும் பாவாணர், "அங்குப் பன்னீராண்டு பணி யாற்றியும் இன்று சொற்பொழிவாற்றவும எனக்கதில் இடமில்லா திருப்பதும் பேராசிரியர் இராமசாமியார் அவர்கள் தமிழ்ப் பற்றின் பேரெல்லையை உணர்த்துகின்றன" என்கிறார். (என் அண்ணாமலை நகர் வாழ்க்கை. பக். 17)

வரலாற்றுத் துறைப் பேராசிரியராக அந்நாளில் சேலங் கல்லூரியில் விளங்கியவர் தி.வை. சொக்கப்பனார். அவர் பாவாணர்க்கு உழுவலன்பொடு திகழ்ந்தவர். கல்லூரிக் காலத்தன்றி அதற்குப்பின்னரும்பாவாணர் தமிழ்த் தொண்டுக்குப் பெரிய துணையாக நின்றவர். முதன் மொழி மாதிகையின் ஆசிரியராகவும், கடனாற்றியவர். பாவாணரின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் தொகுப்புத் திட்டத்தை அரசு செயற்படுத்த வேண்டுமென அந்நாள் முதலமைச்சர் பத்தவற்சலனாரிடம் சென்ற தூதுக் குழுவின் தலைவராக இருந்தவர். ஆதலால் கல்லூரிச் சூழலும் வெளிச் சூழலும் இன்பம் பயப்பனவாக அமைந்தது சேலத்தில் பாவாணர் பணிசெய்த காலமே என அறியவாய்க்கின்றது. அத்தொடர்பே வேலை ஓய்வுக்குப் பின்னரும் உதவியாக இருந்தமையும் அறிய முடிகின்றது.

சேலத்தில் பாவாணர் பணியாற்றிய காலத்தில் அவர் தம் புலமைத் திறத்தைப் போற்றித் தொடர்பு கொண்ட மாணவரே, பின்னாளைத் தென்மொழியாசிரியரும், உ.த.க. அமைப்புச் செயலாளரும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட உருவாக்குநரும் ஆகிய பெருஞ்சித்திரனார். அதனால் சேலம், தந்தசெயலாண்மைக் கொடைகளுள் ஒன்றாகவும், பாவாணர் பணிகளுக்கு அணிவகுத்து நின்று உதவும் வாய்ப்பாகவும் அப்பழந் தொடர்பு சிறந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.

சேலத்தில் 1944 முதல் 1956 வரை பணியாற்றியிருக்கிறார் பாவாணர். 1950 இல் உயர்தரக் கட்டுரை இலக்கணம் வரைந்து கழகத்தின் வழியே வெளியிட்டார். அதில் தம் கல்லூரி நிகழ்ச்சிகள் சிலவற்றையும், தலைவர் முதல்வர் ஆகியோரைப் பற்றிய குறிப்புகள் சிலவற்றையும் எடுத்துக்காட்டாக வரைந்துள்ளார்.