உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

நேர்கூற்று வாக்கியங்களை நேரல் கூற்றாக மாற்றுக என்பதிலுள்ள ஒன்று: "இனிமேல் எந்தக் காரணத்தையிட்டும் எழுத்தாளர் அறைக்குட் செல்லக் கூடாது" என்று எம் கல்லூரித் தலைவர் ஆசிரியர்க்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டு விட்டார்" என்பது. (பக். 260) இன்னவாறு சில.

செந்தமிழ்ச் சொற்பிறப்பு அகரமுதலியிலும் இராமசாமி யாரை நினைக்கிறார் பாவாணர்: "அடுத்து : அடுத்து பேரா. இராமசாமிக் கவுண்டர் அவர்கள் தொல்காப்பியம் பற்றி ஓர் அரிய ஆய்வுரை நிகழ்த்து வார்கள்”

சேலங்கல்லூரிப் பழநிகழ்ச்சி ஒன்றையும், இராமசாமியார் திறத்தைக் காட்டும் நிகழ்ச்சி ஒன்றையும் உயர்தரக் கட்டுரையில் சுட்டுதல் வருமாறு:

பல ஆண்டுகளுக்கு முன் சேலங்கல்லூரியில் ஒரு மாணவன் இருந்தானாம் அவன் வகுப்புயர்த்த நாளில் ஆசிரியர் அறைக்குச் சென்று ஆசிரியர் அனைவரையும் நோக்கி ஆசிரியன்மீர் இன்று மாணவரை வகுப்புயர்த்தப் போகின்றீர்கள். மதிப்பாய் என்னையும் உயர்த்தி விடுங்கள், இல்லாவிட்டால் இதோ பாருங்கள் கத்தி உங்கள் குடலாயிற்று என் மாலைமாயிற்று என்று சொல்வனாம் என்ன துணிகரம் இது நிறுத்தக் குறியிடத் தந்தவற்றுள் ஒன்று. (பக். 282). திருவாளர் அ. இராமசாமிக் கவுண்டர் தாழ்ந்த மதிப்பெண் (Marks) பெற்ற மாணவரைத் தம் கல்லூரியிற் சேர்த்து, உயர்ந்த விளைவை உண்டு பண்ணினார்- இது முக்காற் புள்ளியும் முற்றுப் புள்ளியும் இடத்தந்தவற்றுள் ஒன்று. (பக்.283)

-

சேலம் கல்லூரியில் பணி செய்த காலத்தில் பாவாணர் தாமே தமித்துப் பயின்று (1952 இல்) தமிழ் முதுகலைப்பட்டம் பெற்றமை சுட்டத்தக்க தொன்றாம். சேலம் கல்லூரியில் தமிழ் வழியே ஏரணம் வரலாறு ஆகிய பாடங்களைக் கற்பிக்கக் கல்வியமைச்சர் கட்டளையிட்டிருக்கிறார். பாவாணர்க்கு உவப்பான அத்திட்டத்தில் ஆர்வமாக ஊன்றியிருக்கிறார். "ஆங்கிலம் மட்டும் கற்ற ஆசிரியர்கள் கற்பித்தற்கு அரிதான ஏரணத்தை இரவு பகலாய் மொழிபெயர்த்து வருகின்றோம், இன்னும் ஒரு மாதத்திற்குள் முடிந்து விடும். குறியீடுகள் பெரும்பாலும் தனித்தமிழில் அமையப்பெறுகின்றன" என்கிறார்

(13-7-46 வ.சு.).

"