உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

75

மன்றேறினால் மடி நிரம்பி வழிந்த வருவாய் என்ன ஆனது? மன்றாடித் திண்டாடிப் போகும் நிலைக்கு வைத்துவிட வில்லையா? மண்ணெண்ணெய் வணிகம் செய்துகூட, வயிற்றுப்பாடு பார்க்கும் நிலை உண்டாகி விட வில்லையா? மலையே நிலை சாய்ந்தது போல் ஆக, எந்தச் சூறை அடித்தது? எந்தச் சூழல் எழுந்தது? எந்தஆழிப்பேரலை முழுக்கியது? அயலார் அழிப்பினும் நம்மவர் அழிப்பே தலைப்பட்டு நின்றதல்லவா!

திரு.வி.க. கையகல வீட்டுக்கு உடைமையராக வாவது கடைசி மூச்சை விட்டாரா? இருந்த வாடகை வீட்டையும் அரசாணையால் முத்திரை வைத்து வெளியேற்றிக், கண்ணொளி இழந்த நேரத்தும் - படுத்த படுக்கையாய் இறுதியை எதிர்நோக்கிக் கொண்டிருந்த நிலையிலும் வெளியேற்றப் பட்டாரா இல்லையா? எத்துணைப் பெரிய தொண்டர்! எத்துணைப் பெரிய சால்பர்! எத்தனை எத்தனை தொழிற் சங்கங்களின் தலைவர்! எத்தனை நூல்களின் நூற்பர்!

சட்டத்தில் முதுகலை; ஆங்கிலத்திலும் தமிழிலும் முதுகலை; தாகூர்ச்சட்ட விரிவுரையாளர் என்னும் சுர்த்தி; பன்னூலாசிரியர்; ஆயிரக்கணக்கான பக்கங்களை ஒரே நாளில் படிக்கவும், எந்நூலையும் கருவிநூல் கையில் இல்லாமல் எழுதவும் திறம் பெற்ற உரம்; எம்.எல்.பிள்ளை என்றாலே போதும் நாடறியும் என வாழ்ந்த தமிழ்க் காசு பெற்ற பெருநலம் என்ன? பதவி என்ன?

திருநான்மறை விளக்கம் எழுதியமை செய்யக் கூடாததா? சிவஞான போதம் தமிழ்மூலத்தது என்று நிறுவியது தமிழர்க்கும் அவ்வளவு கசப்பானதா? சமயச் சீர்திருத்தம் பேசிச் 'சாதிக்கட்டு' சமயத்தொடு சாராதது என்றது செய்யத் தகாத குற்றமா? அவர்பிறந்த, நெல்லையர்க்கும் தூத்துக்குடியர்க்கும் வட வேம்பாகி விட்டாரே காசு! திருச்சியர் படுத்திய பாடுதான் சிறிதா?

நடித்திருந்தால் கூட

'தனித்தமிழ் இயக்கம்' என ஒன்றைக் கருதாமல் காணாமல் கண்மூடித்தனத்தை வளர்க்கும்புராணி கராகவும் பூசகராகவும் மடத்துத்தலைவராகவும் சுவாமி வேதாசலம்' எவ்வளவு சிறப்பும் சீரும் பாராட்டும் பணிவிடையும் வாழ்த்தும் வரவேற்பும் பெற்றிருப்பார்! மறைமலையடிகள்