உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

ஆனது தானே, அவரே அவர் தலையில் மண்ணைப் போட்டுக் கொண்டதாக உலகவர் கண்ணுக்கு ஆகிவிட்டது! குருடும் குருடும் சேர்ந்து குருட்டாட்டம் ஆடிக் குழிக்குள் விழ கியிருந்தால் கோபுரத்துச் சிலையாகத் திகழ்வாரே அவர்! பல்லவபுரம் முழுமையும் அவருடைய மையாக வல்லவோ இருந்திருக்கும்!

பயிற்றுமொழிக்காகக் கன்னிதொட்டுச் சென்னை வரை நடைத்திட்டம் கொண்ட பேராசிரியர் சி.இலக்குவனார் செய்ததீமை என்ன? நாடும் மொழியும் நம்மிரு கண்கள் என்பது என்ன நச்சுத்தனமா? அவரவர் வீடே குறி, குடும்பமே குறி, வாழ்வே குறி என்றிருக்கத் தாய் நாட்டையும் தாய்மொழியையும் எண்ணிக் காலமெல்லாம் தொண்டாற்றலாமா? தொண்டாற்ற விடலாமா? விரட்டப்பட்டேன்' என எழுத வைத்ததே கல்லூரி! பறிக்கப்பட்டேன் பதவி எனச் சொல்ல வைத்ததே பணம்! செந்தமிழ்த் தொண்டா? சிறைக்குள் இரு என வைத்ததே அரசு!

'சுடச் சுடரும் பொன்' என்பது வள்ளுவர்! சுடச் சுடர்வது பொன்னே! மற்றவை உருகும் கருகும் ஒழியும்! மேலும் மேலும் ஒளி செய்வது தூய்மை பெறுவது - உரம் பெறுவது பொன்! சூடுபடாமல் -சுடுபடாமல் எந்தச் சுடராவது உண்டாவது உண்டா? ஒளி செய்வது உண்டா? நீரில்இருந்து வந்தாலும், சூட்டொடு தானே ஒளி செய்கின்றது மின்னாற்றல்!

-

-

வலிவராதஒருவர் வலியுறாத ஒருவர் வலிமை பெற்ற துண்டா? வலி வராமல் வலிமை வராதே - சொல் முதலே அது தானே! வலி தானே வலமாகிய வெற்றியின் மூலமும்!

வறுமை வெறுமையன்று; இன்மையுமன்று; அந்நிலைக்கு ஏக்குவதும் உண்டு; நிரம்பிய நலமாக்குவதும் உண்டு; அதனால் தான் ஆழ மூழ்கி அரு முத்துக்குளித்த வள்ளுவர் 'நிரப்பு' என்று வறுமையைக் கண்டார்! நிரம்பிய நலம் செய்வது! நிரம்பிய வளமாவது என்பதைச் சுட்டுகின்றதே நிரப்பு!

வறுமை நொய்வையும் நலிவையும் தருதல் பொது நிலை. அது பெருவலிமை தருவது தானே வந்து தருவது சிறப்பு நிலை! அதனால்தான் அப்பொருள் விளங்கச் சொற்சுரங்கத்துள்

-