உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

77

புகுந்து சுடர்வயிரம் எடுத்த வள்ளுவர், 'நல்குரவு' என்றார். நல்குகின்ற உரவு; உரவாவது வலிமை! உரம்! அறிவும் உரமே! ஆற்றலும் உரமே! இரண்டு பொருளாட்சியும் வள்ளுவத்தில் உண்டே!

வேர்ச் சொல்லாய்வே விழுமிய பிறவித் தொண்டாகக் கொண்ட பாவாணர் நிலையை, இச் சொற் பொருள் விளக்கம் தெளிவாக்குதல் பொருததமே யன்றோ!

நிரப்பாலும் நல்வகுரவாலும் சொல்விளக்கம் காட்டி என்ன? 'பாவாணர் பட்டபாடும் கெட்டகேடும்' தீர்ந்து விடுமா? 'இருப்பும் இல்லை எடுப்பும் இல்லை' என்று வருந்தியது நீங்கி விடுமா?

அங்கேயும் திருவள்ளுவர் புன்முறுவல்செய்கின்றார்:

"அல்லல்அருளாள்வார்க்கு இல்லை" என்கிறார். 'இல்லவே இல்லை' என அறைந்து சொல்கிறார்! ஐயுறவா?'வளிவழங்கு மல்லல்மாஞாலத்தைப் பார்" அதுவே உண்மை எடுத்துரைக்கும் என்கிறார். இதற்கும் ஒருபடியன்று; பலபடி - பல்லாயிரம்படி மேலே செல்கின்றார் :

“நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயுநீர

செய்யாது அமைகலா வாறு".

என்கிறார். நயனுடையார் ஒருவர் நல்கூர்ந்தார் ஆகிவிட்டால் உண்டாம் கேடு உப்புக்கும் காடிக்கும் உலமருவோர் நிலைமையில் ஒழிவது அன்று; அந்நயனுடையார் தாம் செய்ய வேண்டியவற்றைச், செய்து முடிக்க வேண்டியவற்றைச் செய்ய முடியாமலும் செய்யா மல்வாளா இருக்க முடியாமலும் இருக்கின்ற நிலை இருக்கிறதே! இக்கொடுமைதான் என்கிறார்! பாவாணர்க்கென எதிரதா மொழிந்த வள்ளுவமா இது? பாவாணர் அன்னார்க் கெனப் பொதுவாகப் புகன்ற பொய்யா மொழியார் புகற்சியா இது!

கொடி கட்டிப் பறந்த தமிழ்ப் பதவியாளர்க்கு அவர்கள் கண்மறைந்த பின்னைக் கொடி பிடிக்க ஆள் உண்டா? ஓர் இயக்கம் உண்டா? உணர்வு மிக்க இயக்கம் உண்டா? ஒரே ஒரு பாவாணர்க்குத் தானே அவ்வியக்கம் உண்டு. அவர் தம் ஆசானாகவும் வழிகாட்டியாகவும் தலைவராகவும் போற்றிய மறைமலையடிகள் கண்ட பொது நிலைக் கழகம் எது எனக்