உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

கூறத்தடமுண்டா? அக் கழகம், அடிகளால் தவமாளிகை யொடு தவழ்ந்து தங்கிவிட்டதே! உலகளாவிய உணர்வு அமைப்பன்றோ, பாவாணர்க்கு அமைந்த உலகத் தமிழ்க் கழகம்! பாவாணரால் காணப்பட்ட உ.த.க! ஓரைவர் ஒரு பதின்மர் என்றேனும், உலகத்துத் தமிழர் வாழும் பரப்பில் உ.த.க. வின் உணர்வுப் பிழம்புகள் இல்லாமல் இல்லையே! நாடு மொழி இனக் காவலராகத் திகழ்வாருள்-திகழவருவாருள் - அவர்தாமே தலைமைப் பெறுப்பாளராக நிமிர்கின்றார்! அவர்க்கு முந்துநின்று உதவவும் வரிந்து கட்டிக் கொண்டு அவர்தாமே நிற்கிறார்! தமிழின் விடுதலை வரலாறு எழுதப் படத்தான் போகிறது! அங்கேதலைமணியாய்ப் பாவாணர் சுடரவே போகிறார்!