உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. மனைவி மக்கள்

புரிவு தெரியா நாள் தொட்டே மூத்த அக்கையையே அன்னையெனக் கொண்டு அவர் அரவணைப்பிலே விளங்கிய பாவாணர் ஆசிரியப் பணி ஏற்ற பின்னர் அக்கையார் தீர்மானித்த எசுத்தர் என்னும் பெண்ணையே மணந்தார். அவரே கரிவலம் வந்த நல்லூரின் மேல்பால் மூன்று அயிரத் தொலைவில் உள்ள புறக்கடையான்பட்டி என்னும் ஊர் உறவினர்.

பாவாணரும் துணையும் அன்பொத்த வாழ்வில் வாழ்ந்தனர். அவ்வாழ்வால் ஒரு மகப்பேறும் உண்டாயிற்று. மகவு ஆண்; மணவாளதாசன் என்பது பெயர். மணவாளனுக்கு ஓரகவை எய்து முன்னரே அன்னை யார் இறையடி எய்தினார். கைக்குழந்தை, பாவாணர் கைவயத்தாயிற்று!

பாவாணரின் இளைய அண்ணனார்க்கு மகப்பேறு வாய்க்கவில்லை. அதனால், குழந்தை மணவாளனைத் தாம் தத்தெடுத்துக் கொள்வதாகக் கேட்டார். தத்துப் பிள்ளையாக எழுதிக் கொடுத்துப், பாவாணரிடம்சின்ன அண்ணனார் மணவாளக் குழந்தையைப் பெற்றுக் கொண்டார்; மனைவியார் இல்லை! மகனார் தத்தாயினார்! அத்தத்தும், தம் குடும்பத்தின் ஓருறுப்பில் நிகழ்ந்த தத்து. இந்நிலையில் மூத்தஅக்கையார்க்கு மீண்டும் பாவாணரை இல்லறத்தில் அமைக்கும் கடனுண்டாயிற்று. அக்கருத்தில் அவர் ஊன்றி, மணமகள் தேடுபடலத்தில் இருந்தார்!

பாவாணர் மணமகள் தேடு படலத்தில் சிறிதும் விருப்புக் காட்டினார் அல்லர்; துணை போயினாரும் அல்லர்; அவர் இவர் என்று கருத்துக் கேட்புக்கும் காது வாங்கினார் அல்லர்; பாவாணர் தாமே மணமகளாரைக் கண்டு கொண்டார்; தேர்ந்து தெளிந்து கண்டு கொண்டார்! ஊரூர்க்குப் பெண்பார்க்கும் அக்கையாரை எண்ணி உள்நகைத்த பாவாணர், உரியாள் ஒத்த உணர்வாள் அக்கையின் மகளையே மணவாட்டியாக்கும் உறைப்பில் நின்றார்! அவரே நேசமணி அம்மையார். தேவநேய