உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

நேயமணி திருமணம் 1930 இல்நிகழ்ந்தது. அவர்கள் இல்வாழ்வு எப்படி இருந்தது? அவரே சொல்கிறார்:

"நானும் என்மனைவியும் ஓருயிரும் ஈருடலுமாக இருந்தோம்"

"யானும் என்மனைவியும் ஒருயிரும் ஈருடலுமாக இருந்தோம்"

இத்தொடர்கள் இருமுறைகள் தவறாக அல்லது மறந்து எழுதப்பட்டனவோ என எண்ணவேண்டா. பாவாணர், பேராசிரியர் வி.பொ. பழனிவேலனார்க்குப்(ககூ அறவம் ககூ-ரு. தமிழ்ப்பாவை ஆசிரியர் வி.அ. கருணை தாசனார்க்கும் (26-11-3) எழுதிய கடிதங்களில் உள்ளவை. நான் யான் மட்டுமே மாற்றம். ஒரு முறைக்கு இருமுறை அன்று பன்முறை கூறியதும் எழுதி யதுமாம் மெய்ச் செய்தி. பாவாணர் நேசமணியார் திருமணம், பாவாணர் மன்னார் குடியில் பணிசெய்த காலத்தில் நிகழ்ந்தது. பாவாணப் பேரறிஞர் தம்மனை வாழ்வொடு எவ்வளவு ஒன்றிப் போய் விடுகின்றார்! இது விந்தையே! ஆழ்ந்தகன்ற அறிவர் கலைத்திறம் வல்லார்-பேரிறைப் பற்றர் - பெருந்தன்மைத்தர் இன்னர், குடும்பத்தில் பற்றுவைத்தல்அரிது. பாவாணர் அதற்கு விலக்கென விளங்கியமை மடல்களால் அறிய வருகின்றது.

"என் மனைவிக்கு இது 7-ம் மாதம் ஆகையால் தன் தாயூர்க்கு (கொடுமுடிக்கு)ச் செல்கின்றாள். அவள் தங்கை சென்னையில் இருக்கின்றாள். அவளை உதவிக்காகக் கூட்டிக் கொண்டு வர வேண்டும்"(18-8-'31)

"என் மனைவி கொடு முடியில்சுகமாயிருக்கிறாள். இது 9 ஆம் மாதம்முதற்பேறான படியால் இம்மாதக் கடைசியில் இருக்கும் பிள்ளைப்பேறு (12-10-31).

"கொடு முடிபோய் அங்கு இருவாரம் இருந்து இந்த மாதம் 4 ஆம் தேதி என் மனைவியுடனும் குழமகனுடனும் கடவுளருளால் இங்கு (மன்னார் குடிக்கு)ச் சுகமாய் வந்து சேர்ந்தேன் (7-1-32)'

'என்மகன் சென்ற இரண்டு வாரமாய் வயிற்றளைச் சலால் பெரும் பாடுபட்டுப் போனான். இன்று தெய்வத் திருவருளால் சுகமாயினும் பணமுடை பெரிதாய் விட்டது. எந்தக் கணக்கிலேனும் 5ரூ உடனே விடுத்தீர்களாயின் பேருபகாரமாகும். நன்னிலையில் இல்லை." (11-1-33).

மனம்

-