உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(4

பாவாணர்

81

'நூலை அச்சிட்டு முடித்ததும் எனக்குச் சேரவேண்டிய எஞ்சிய தொகையை மொத்தமாய் அனுப்பிவிடுக. என் மனைவிக்கு மிகத்தேவையானதோர் நகை செய்தல்வேண்டும்” (23-10--34).

(1963 முடியக் கிடைக்கும் கடிதங்கள் அனைத்தும் தாமரைச் செல்வர் வ.சுப்பையா அவர்களுக்கு எழுதப் பட்டனவே. அதற்குப் பிற்பட்டனவே பிறபிறர்க்கும் உரியனவாய் வாய்க்கின்றன என்பது அறியத் தக்க ஒரு குறிப்புச் செய்தியாம்)

இக்கடிதங்கள் வழியே பாவாணர் இல்வாழ்வுப் பற்றுமை நன்கு விளக்கமாம். "சிதலைதினப்பட்ட ஆலமரத்தை, மதலையாய் மற்றதன் வீழுன்றியாங்குக் குதலைமை தந்தைகண் தோன்றின் தான் பெற்ற, புதல்வன் மறைப்பக்கெடும் என்பது போல் (நாலடியார் தாளாண்மை), தந்தை தாயிலியாகிய தம்மை முற்றாகத்தாங்கிய அக்கை குடியைத் தாம் தாங்கும் நெருக்கடியும் 1938 இல் பாவாணர்க்கு நேர்கின்றது.

“என் அத்தான் கொடுமுடியில்இறந்து போனார்” (4-11-38)

என் அக்காளின் இளையமகளும் என் மனைவியின் தங்கையுமாகிய நீலாம்பாள் என்னும் 18 ஆண்டுப் பெண் பிள்ளை சென்ற வாரம் முழுதும்கடு நோயாய்க் கிடந்து நேற்றுக் காலை இறந்து போனதால் எழுத்து வேலை சிறிதும் நடை பெறவில்லை. இன்னும் ஆற்றொணாத்துயரம்" (21-8-39)

'என் கொழுந்தியார் இறந்தது மிக எளிதான காரியமன்று. என் அக்காள் குடும்பம்பொறையே என்மேல்விழுந்ததினால்பல ஒழுங்குகள் செய்யவேண்டியிருந்தது. பின்பு என் கைக்குழந்தை நோய் வாய்பட்டு இன்னும் முழுச்சுகமும் பெறவில்லை.'

(21-8-39)

""

“என் கைக்குழந்தைக்கு இன்னும் நலமாகவில்லை. நாள் தோறும் மருத்துவம்தான். நான் கவனிக்கா விட்டால்வேறு ஆள் இல்லை. நாளிற் பெரும் பகுதி அதிலேயே செலவாகிறது. என் அக்காள் மகன் இங்கே படிக்கிறவன் விளையாட்டில் வலது கையெலும்பு முறிந்து நாள்தொறும் சிகிச்சை செய்யப் படுகிறான் (20-9-39)

"இன்றுதான் உளம் அமைதி அடைந்தது; குழந்தை நலமாகி விட்டது. பையனுக்கு முறிந்த முறியும் கூடி விட்டது" (7-10-39)