உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

"என் அருமைக்குழ மகன் பைந்தமிழ் வளர்த்த பாண்டியன் முந்தா நாள் (24-12-39) ஞாயிறு காலை 8 மணிக்கு மீளா உலகம் புகுந்து விட்ான். இவ்வருத்தம் என் வாழ் நாளெல்லாம் நீடும. சென்ற ஒருமாதமாய் நோய் கொடிதாய் இருந்தமையின் என்னால் வேறு வேலை ஒன்றும் செய்தற்கில்லை" (26-12-39)

பாவாணர் சுற்றந்தழாலும், குடும்பச்சூழலும், பிள்ளைகள் மேற்கொண்ட பற்றுமையும் சீரிய வகையில் பேணும் குடும்பச் சீர்மையும் இவ் வெழுத்துக்களாலே இனிது விளங்கும். இவை யெல்லாம் பாவாணர் திருச்சியில் பணியாற்றிய காலத்துச் செய்திகள்:"

பாவாணர்க்கு மக்கள் ஐவர் உளர்; நால்வர் ஆடவர்; ஒருவர்மகளார். அவர்கள் முறையே:

இந்நாள் (1889) அகவை

நச்சினார்க் கினிய நம்பி

56

சிலுவையை வென்ற செல்வராயன்

53

அருங்கலை வல்லான் அடியார்க்கு நல்லான்

50

மடந்தவிர்த்த மங்கையர்க்கரசி

42

மணிமன்ற வாணன்

41

என்பார்.

பெயர்களைப் பற்றி ஒரு குறிப்புக் காட்டுகிறார் பாவாணர்

"பெயர்கள் நீண்டிருக்கும்போது இறுதிச் சொல்லைத் தான் அழைக்க வேண்டும்" என்பது அது.எடுத்துக்காட்டாக, மடந்தவிர்த்த மங்கை - மங்கை" என்கிறார். மேலும், பெண்களின் உறுப்பாகைக் குறிக்கும் பெயராக இடுவது நன்றன்று" என்றும் சுட்டுகிறார். அவர் எடுத்துக் காட்டிய பெயர் தம்மகளார் பெயரே அன்றோ!

இவருள் நச்சினார்க்கினிய நம்பி ஆசிரியர்; கோபியில் பணியாற்றியவர்.

சிலுவையை வென்ற செல்வராயனும் ஆசிரியரே; அவர் சேலத்தில் பணி செய்தவர். அடியார்க்கு நல்லான் சமயத்துற வோராய் (பாதிரியாராய்) மைசூரிலிருப்பவர்.