உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

83

மடந்தவிர்த்த மங்கையர்கரசியார் செவிலியர் பணியராய் எண்ணூரில் வாழ்பவர்.

மணிமன்றவாணன் என்னும் மணி காட்டுப் பாடியிலும் பாவாணருடன் இருந்து தென்குமரி என்னும் பெயரிய அச்சகம் நடத்தி பின்னர்ச் சென்னைக்கு வந்து பாவாணர் பெயர் விளங்கு மனையில் (கலைஞர் கருணாநிதி நகரில்) இருப்பவர்; அரசுப் பணி செய்பவர். அக்காள் மகளார் 'நீலாம்பாள்' பாவாணர் பெயர் சூட்டுதலால் கொண்டாரோ மறைமலையடிகளார் தவமகளார் பெயராயிற்றே அது! தலைமகன் நச்சினார்க்கினிய நம்பியின் திருமணம் 1957 இல்நிகழ்ந்துள்ளது.

"என் மகன் திருமணம் இன்னும் நாட்குறிப்பிடப்படவில்லை. ஆயின் அடுத்த மாதமாதலால் இன்றிருந்தே முன்னேற்பாடுகள் செய்யவேண்டியிருக்கிறது. திருமணத்திற்கு உடுப்பே 300 உரூபாவிற்கு மேற்பட்டு விடும். அதைச் சென்னையிலே தான் வாங்கலாம் என்றிருக்கிறேன். என் மகனுக்குக் கைக் கடியாரமும் வாங்க வேண்டியிருக்கின்றது. எத்தனை சிக்கனமாக முடிப்பினும் திருமணச்செலவு ஆயிரம் ரூபாவிற்கு இழுத்துவிடும் (19-1-57)

என் மகன் நம்பிக்கு ஆவணி 3ஆம் நாள் 19-8-57 கோயிலில் திருமணம்; அழைப்பிதழ் அச்சாகின்றது காரிக்கிழமை விடுப்பேன்

(9-8-57)

'அடுத்த மாதம்' என்று பாவாணர் குறித்த நாள், ஏழு மாதம் கடந்தமை கடிதத்தால் அறிய முடிகின்றது. கால நீட்டிப்புக்குக் காரணம் இருந்திருக்கும்!

27-10-1963 ஆம் நாள் பாவாணர் வாழ்வில் பேரிடியாக அமைந்து விட்டநாள். அவர் கூறியவாறு ஓருயிரும் ஈருடலுமாக இருந்த உடல்கள் இரண்டனுள் நேசமணியார் உடல் வீழ்ந்து விட்டநாள்! பொற்றாலியோடு எவையும் போம் என்பதைப் பலுப்படுத்தி விட்ட நாள்! குழந்தையாய் - உலகியல் அறியாக் குழந்தையாய் - இருந்த பாவாணர்க்குத் தாயாய் - அமைச்சாய் நட்பாய் - துணையாய் - மருத்துவியாய் - செவிலியாய் - இருந்த நேசமணியார் பிரிவு பாவாணரை வாட்டியது! வருத்தியது!

-

காட்டுப்பாடியில், பணியின்றியிருந்த காலம்! வேலை செய்து வந்த நாளிலேயே முட்டிப்பாட்டில் முழுகிக் கிடந்த வாழ்வு, வேலையின்றி மூன்றாண்டு கடந்த நிலையில் எப்படி

-