உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

இருந்திருக்கும்! 'நோகோ யானே தேய்கமாலை" என்னும் குறிஞ்சிக் கபிலர் பறம்புப் பிரிவுப் பாட்டுக்கே சான்றாகி விட்டார் பாவாணர்: செய்தி இது.

திருவாட்டி நேயமணி தேவநேயன் மறைந்தார்

மொழிப்பெரும்புலவர் திரு.ஞா.தேநேயப் பாவாணர் அவர்களின் அருமை மனைவியார் திருவாட்டி நேயமணி அம்மையார் ஐப்பசி 10ஆம்நாள் (27-10-63) அன்று இரவு 11 மணியளவில் திடுமென் இல்வுலக வாழ்வை நீத்தார் என்பதைத் தமிழ் அன்பர்கட்கு மிகப்பெரும் வருத்தத்துடன் கூறிக் கொள்கின்றோம். அன்பும் பண்பும் ஒருங்கே விளங்கப் பெற்றுப் பாவாணர் அவர்களின் தனித்தமிழ்ப் போராட்டங் கட்குப் பெருந்துணையாய் நின்று ஊக்கமளித்த அப் பெருமாட்டியைப் பிரிந்து, கையற்று நிற்கும் பாவாணர் அவர்கட்கும், அன்னையைப் பிரிந்து ஆறாத்துயருறும் குழந்தைச் செல்வங்கட்கும் நம் ஆற்றாமையைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தண்டமிழ்த் தாயின் அருந்தமிழ் மகனாய் பாவாணர்க் கேற்பட்ட இப்பேரிழப்பு ஈடுசெய்ய இயலாத தொன்றாகும்.

தென்மொழி 1 : 10; நவ, 1963. பக்.7

ஆசிரியர்.

"என் மனைவியார் அகுத்தோபர் 27 ஆம் பக்கல்இறந்தார். அன்று மருத்துவச் சாலைக்கு வாடகை இயங்கியில் அனுப்ப என்னிடம் 10 உருபாஇல்லாதிருந்தது. அனுப்பியிருந்தால் பிழைத்திருப்பார்... அவர் பிரிவு என்னாற் பொறுக்குந் தரமன்று. பல் சான்றீரே பல் சான்றீரே என்னும்புலச்செய்யுளை நோக்கினால் என் கூற்று விளங்கும். காதல் பெண்பாற்கு மட்டும் உரியதன்று. முக்கடமைகளை நிறைவேற்றவே இன்று உயிரோடிருக்கிறேன். அவற்றுள் ஒன்று வடமொழியினின்று தமிழை மீட்டல்" (19 அறவம் ககூசாரு; 1965 வி.பொ.ப)

“என் ஆருயிர் மனைவியார் பிரிவுத் துன்பம்ஆற்றொணாததும் தாங்கொணாததும் ஆதலின், இன்னும் மூன்றாண்டிற்கு மேல்இருக்க விருப்பமில்லை. அதற்குள் தமிழ் வடமொழியினின்று மீட்கப்பட்டு விடும்" (20 கும்பம் 1965; வி.பொ.ப)

"என் மனைவியார் இறந்த அன்றே என் உலக வாழ்க்கை

முடிந்தது" (27-1-64; வி. பொ. ப)