உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(4

பாவாணர்

85

மணமாகாத என் இரு மக்கட்காகவே உடல் தாங்கிக் கொண்டிருக்கிறேன்" (26-11-63; வி.அ.க)

"என் மனைவியார் இறந்ததை எண்ணி வருந்திய தால் இன்று நெஞ்சாங்குலை ஈளைநோய் என்னைத் தாக்கியது." (1-12- 64; மி.மு.சி)

ஒரு பாடலாலும் தாம் பெற்ற துயரைப் பதின் மூன்றாண்டு களின் பின்னர் வெளியிடுகின்றார்:

புற்று நோயினால் போன என்மனை பற்றி நீடியே பரிந்தொ ரீளையைப் பெற்று ழந்தபின் பிழையை நோக்கியே முற்று நீக்கினென் முதல்வ னருளினால்” என்பது அது (15-11-77; இ.கு.)

'பல் சான்றீரே' என்னும் புறப்பாட்டைச் சுட்டுகிறாரே பாவாணர். அது, பூதப்பாண்டியன்தேவி பெருங்கோப்பெண்டு தீப்பாய்வாள் தன்னைத் தடுப்பாரிடம் "பொய்கையும் தீயும் ஓரற்றே" என்று சொல்லிச் சென்றதாகும் (புறம். 246)

பாவாணர் துணையின் பிரிவால் வடக்கிருக்கவும் துணிந் திருக்கிறார். பின்னர் நண்பர்கள் மக்கள் வலியுறுத்தலால் தடையுண்டிருக்கிறார் என்பது கேள்விச் செய்தி.

மணமாகாத மக்கள் இருவரைச் சுட்டுகிறாரே பாவாணர். அவர்கள் மங்கையர்க்கரசியாரும் மணியும் ஆவர். பாவாணர் துணையொடும் இருந்த போழ்திலேயே செல்வராயனுக்குத் திருமணமாகி விட்டது எனத் தெரிந்துளோம்.

பாவாணர்க்கு அணுக்கராகவும் ஆர்வத் தொண்டராகவும் இருந்தவருள் ஒருவர் சேலம் அரிமாப் புலவர் திரு. சின்னாண்டார். அவருக்கு 29-6-64 இல் எழுதிய கடிதத்தில் "ஏத்தாம்பூரிலாவது ஆற்றூரிலாவது புள்ளி மான்குட்டி விலைக்குக் கிடைக்குமா?" என்று வினாவுகின்றார். தாமும் பிற வகையாலும் மான் குட்டி வாங்கும் முயற்சியையும் மேற்கொள்கிறார். பின்னர் மான்குட்டி அரூர்ப் பக்கத்தில் இருக்கிறது. ஆதலால் அங்குப் பார்க்க வேண்டாம் (2-9-64) என்றும் கூறுகிறார், அங்குப் புள்ளிமான் கலைக்குட்டி ஒன்றை வாங்கிய நிலை, அதனைக் கொணர்ந்த திறம் ஆகியவற்றை 25-7-64 அஞ்சலில் விரிவாக வரைகிறார்.

- -