உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுப் புலவர்கள்-2

85

"இலக்கணக் கடல் புகுந்து இடர்ப்பட வல்லேம் அல்லேம்” "தேவியை விடுகின்றானா அன்றி ஆவியை விடுகின்றானா அறிந்துவா” 'வள்ளியின் தேனூறு சொல்லுக்கு வாயூறி நின்ற குமரன்”

என்றெல்லாம் கேட்பவர் மகிழவும், என்றும் நினைந்து இன்புறவும் தக்கவாறு கூறுவார். சொல்லை அவர் தேடிப் போவது இல்லை! சொல் அவரைத் தேடி வந்து நின்று ஏவல் கேட்டன என்பது நாடறிந்த செய்தி.