உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. செம்மல் சிதம்பரனார்

செம்மல் என்பது தலைவன், அரசன், சிறந்தோன், வலிமையாளன் முதலாய பல பொருள் தரும் ஒருசொல். இப் பலபொருளுக்கும் உரிய ஒருவராகத் திகழ்ந்தவர் கப்பலோட்டிய தமிழர் விடுதலை வீரர் வ.உ. சிதம்பரனார் ஆவர்.

கப்பற்படை கொண்டு கடற் பகைவர்களை அழித்த வேந்தன் சேரன் செங்குட்டுவன். அதனால் அவன் "கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்' என்று அழைக்கப்பெற்றான். யவனம், சீனம் முதலான நாடுகளுக்கு வணிகக் கப்பல்களைச் செலுத்திச் சென்று உலகப் புகழ்வாய்ந்த வேந்தர் பலர் தமிழ் நிலத்தில் இருந்தனர். எனினும் கப்பலோட்டிய தமிழர் என்று கூறினால் வ.உ.சி. யையே குறிக்கும். அத்தகைய சிறப்புடையவர் ஆயினார் அவர்.

கடலோடிகளாகத் திரிந்து உலக வாணிகருள் சிறந்து விளங்கி ஒரு பெரிய இடத்தைப் பெற்றிருந்த தமிழர் அயலார்க்கு அடிமை ஆயினர். ஆட்சி உரிமை இழந்தனர். வாணிக உரிமை இழந்தனர். இந்நிலையில் கப்பல் வாணிகமும் அயலார் கையில் சென்றது. அதனைக் கண்டு வீறு கொண்டு எழுந்த வீரர் வ.உ.சி. பண்டைப் பெருமையை நிலைநாட்டுவார் போலக் கப்பல் கழகம் நிறுவினார். இரண்டு கப்பல்களை வாங்கி, கடல் உலா வந்தார். அப்பெருமையால் 'கப்பலோட்டிய தமிழர்' ஆனார்.

உரிமை வீரன் எனப் போற்றப்பெறும் வீரபாண்டியக் கட்டபொம்மனும், உரிமைக் கவி எனப் பாராட்டப் பெறும் பாரதியாரும் பிறந்த நெல்லை மாவட்டத்து மண்ணிலேதான் வீரர் சிதம்பரனார் பிறந்தார்.

ஓட்டப்பிடாரத்தில் கவிராய சிதம்பரம் பிள்ளை என்பார் ஒருவர் இருந்தார். அவர் வழிவழிக் கவிராயர் குடும்பத்தைச்