உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

தொடக்கப்பள்ளியிலேயே அரிச்சுவடி, ஆத்தி சூடி, எண்சுவடி, உலகநீதி, கொன்றை வேந்தன், குழிப் பெருக்கல், வெற்றிவேற்கை, நீதி வெண்பா, மூதுரை முதலிய நூல்களைக் கற்றார்.

சுவர்மேல் நடத்தல், மரம் ஏறுதல், கல்லெறிதல், கண்பொத்தி விளையாடல், மூச்சடக்குதல், குதித்தாடல், கோலி ஆடுதல், குதிரை ஏறல், கொம்பேறி நடத்தல், திரிவிளையாட்டு, கால்மாறி ஓடுதல், திரிபந்து ஆடுதல், சடுகுடு, கிளித் தட்டு பல்லி முதலியன ஆடுதல், மல் விளையாடல், சதுரங்க விளையாட்டு, முத்துக்குறி விளையாட்டு, பன்னான்கு குழி விளையாட்டு, சீட்டு விளையாட்டு, வெடிவைத்துச் சுடுதல், அம்பு எறிதல் ஆகிய பல விளையாடல்களை விளையாடினார். இத்தகைய அறிவொடு கூடிய ஆற்றல்தான் சிதம்பரனாரை வீர சிதம்பரனார் ஆக்கியது என்பது உண்மையல்லவா!

பள்ளியிறுதி வகுப்பை முடித்த பின்பு ஒட்டப்பிடாரம் வட்ட ஆட்சி அலுவலகத்தில் ஓர் எழுத்தராக அமர்ந்தார் சிதம்பரனார். அவ் வேலையில் தொடர விருப்பில்லாமல், வழக்கறிஞர் வேலைக்குப் படிக்க விரும்பித் திருச்சிக்குச் சென்றார். சட்டக் கல்வியை முடித்துக் கொண்டு மீண்டார்.

தூத்துக்குடியில் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினார் சிதம்பரனார். ஆனால், அவர் தம்மோடு இருந்து பணி செய்வது நலம் என அறிந்து ஓட்டப்பிடாரத்திற்கு அழைத்துக் கொண்டார் உலகநாதர்.

வழக்கறிஞர் தொழிலை அறநெறிக்கு அல்லாமல் பிற நெறிக்குப் பயன்படுத்தாத நல்லோர் சிலரே ஆவர். அவர்கள் இந்திய நாட்டுத் தந்தையார் காந்தியடிகள், அமெரிக்க நாட்டுப் பெருந்தலைவர் ஆபிரகாம் லிங்கன் என்பவர் போல விரல் விட்டு எண்ணத்தக்கவர் ஆவர். அவர்களுள் ஒருவராக விளங்கினார் சிதம்பரனார்.

தொழிலில் நேர்மையைக் கடைப்பிடிக்க விரும்புபவர்க்குத் துணிவு மிக வேண்டும். அத் துணிவால் அல்லல்களும் உண்டாகும். அவற்றையும் தாங்கிக் கொள்ளும் உரமும் வேண்டும். அவ் வெல்லாமும் அமைந்தவராகச் சிதம்பரனார் விளங்கியதால்