உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

சிதம்பரனார்க்கு வரும் புகழைக் கண்டு பொறாமை கொண்டு மறைமுகமாகக் கேடு செய்யும் கெடுமதியாளரை னங்கண்டு, அவர்கள் சூழ்ச்சி வழிகளை ஒடுக்கித் தாக்குப் பிடிக்க வேண்டியது ஒருபக்கம்!

அமைப்புகளுக்கு வேண்டிய பங்குத் தொகையைத் திரட்டுவதற்காகவும், பங்குத் தொகை தந்தவரும் அத்தொகையைத் திருப்பித் தருமாறு வற்புறுத்தும் நிலைமை வந்தபோது, அவர்களைச் சரிப்படுத்துவதற்காகவும் கொண்ட அல்லல் ஒருபக்கம்! இத்தகைய தாக்குதல்களுக்கு ஈடுதந்து நிலைகுலையா மலைபோல் நிமிர்ந்து செயலாற்றினார் சிதம்பரனார்.

நாவாய்ச் சங்கச் செயலாளர் சிதம்பரனார். தலைவர் பாலவனத்தம் குறுநில மன்னர் பொ பாண்டித்துரைத் தேவர். செயற்குழுவினர் பதின்மூவர். சட்டத்துறை ஆய்வுரைஞர் சேலம் விசயராகவாச்சாரியார் முதலிய நால்வர்.

நாவாய்ச் சங்கம் முதற்கண் “சாலயன் கப்பற் கழகம் என்னும் கழகத்தில் இருந்து கப்பல்களைக் குத்தகைக்கு அமர்த்தித் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் போக்குவரவு நடத்தியது. ஆங்கிலக் கப்பல் கழகமும், அரசும் சேர்ந்து செய்த சூழ்ச்சியால் குத்தகைக் கப்பல் தந்த கழகத்தார் அதனை மறுத்து விட்டனர்.

"ஆங்கில அரசை எதிர்க்க ஆகுமா?" என்று இடித்துப் பேசுதற்கும் பொறாமைக்காரர் முன்வந்தனர். 'மலையே உருண்டு வந்தாலும் மலையேன்' என நிமிர்ந்து நின்றார் சிதம்பரனார். கப்பல்களை விலைக்கு வாங்கிவருவது என முடிவு செய்தார். "கப்பல்களோடு இங்கு வருவேன்; இல்லையேல் கடலில் விழுந்து சாவேன்” என்னும் துணிவுடன் பம்பாய்க்குச் சென்றார்.

46

அருமை மைந்தன் உலகநாதனுக்கு உடல்நலமில்லை; வருக" என்று அன்பர்கள் தந்தி தந்து, அழைத்தனர். ஆனால் சிதம்பரனார், "கடவுள் பெரியவர்! அவர் காப்பார்!' என்று கூறித் தம் முயற்சியில் இறங்கினார். 'காலியா' 'லாவோ' என்னும் இரண்டு கப்பல்களுடன் திரும்பினார். தாயின் மணிக் கொடியோடு கடலுலா வந்தன 'காலியா' ‘லாவோ'. களிப்பிலே உலாவந்தாரா சிதம்பரனார்?