உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொங்கு நாட்டுப் புலவர்கள்

105

ஆதலால் பல்வேறு மொழிப் புலவர்களும் பாராட்டும் புகழ் பெற்றார்.

வழக்கறிஞர் தொழிலைப் பல ஆண்டுகள் செய்தார். ஆயினும் அத் தொழிலில் அவர் உள்ளம் பெரிதும் ஈடுபடவில்லை. தமிழ்த் தொண்டிலும் சமயத் தொண்டிலும் மிக ஈடுபட்டார். அவர் தொடர்பு கொள்ளாத தமிழ் மேடையோ, மாநாடோ, அமைப்போ கோவைப் பகுதியில் இல்லை என்னும் நிலைமையில் பங்கு கொண்டார். அப் பங்குதான் அவரைக் "கோவைக் கிழார் ஆக்கிற்று.

1940ஆம் ஆண்டில் கோவை கிழார் அறநிலைய ஆணையர் என்னும் பதவி பெற்றார். அஃது அவர் உள்ளத்திற்கு மிக ஏற்றதாக அமைந்தது. திருக்கோயில்களையெல்லாம் காணவும், சீர்திருத் தங்கள் செய்யவும், திருக்கோயில் வரலாற்றுக் குறிப்புகளையும், கல்வெட்டுக்களையும் தொகுக்கவும் அரிய வாய்ப்பு ஆயிற்று.

மலைநாடு, துளுநாடு, கொங்கு நாடு, பாண்டி நாடு, தொண்டை நாடு,நடுநாடு ஆகிய நாடுகளில் அமைந்துள்ள பாடல்பெற்ற திருக்கோயில்கள் அனைத்தையும் கண்டு மகிழ்ந்தார். சோழநாட்டுத் திருக்கோயில்கள் பலவற்றையும் கண்டு இன்புற்றார். வ்வகையில் 2,250 அரிய குறிப்புகளைக் கோவைகிழார் தொகுத்தார். இத்தொகுப்பு வரலாற்றுலகுக்குக் கிடைத்த அரிய செல்வமாகும்.

முயற்சியாளர்க்கும் தொண்டர்களுக்கும் வாழ்நாள் அளவும் ஓய்வு என்பது ஏது? அவர்கள் பிறர்க்கு உழைப்பதையே பெருந்தவமாகக் கொள்வர். அவ்வாறே நம் கோவைகிழார் அவர்களும் இளமை தொட்டே பொதுப்பணியில் ஈடுபட்டார். பின்னர் அரசியல் பணியிலிருந்து ஓய்வுபெற்றாலும் பொதுப் பணியிலிருந்து ஓய்வுபெற்றார் அல்லர்.நாளும் பொழுதும் நற்பணிகளிலேயே செலவிட்டு வந்தார். அவர் செய்த

பொதுப்பணிகள் பல திறத்தன.

பத்தாண்டுக் காலம் நகரவை உறுப்பினராகவும், துணைத் தலைவராகவும் பணிசெய்தார். சில ஆண்டுகள் மாவட்டக் கல்விச் சங்கத்தலைவராக விளங்கினார். கோவை வட்டக் கழகத்தின் உறுப்பினராகவும், மருத்துவ ஆய்வுக் கழகத்தின் உறுப்பினராகவும்