உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

கிழாரின் நாள்வழிக் கடமைகள் குறித்துக் கோவைத் தமிழ்ச்சங்கம் வெளியிடும் செய்தி வருமாறு:

"காலையில் பொழுது விடியுமுன் எழுந்தவுடனே காலைக் கடனை முடித்துவிட்டு ஊருக்கு வெளியே சிறிது தூரம் நடந்து உலாவி வருவதுண்டு. அப்போது தூய்மையான குளிர்ந்த காற்று உடலில் தோயவே மிகவும் உற்சாகப்படுவார். இவ்விதம் உலாவி வரும்போது தம் கண்களில் படும் நற்காட்சிகளையெல்லாம் தம் நெஞ்சில் படம்போல் பிடித்துவிடுவார். திரும்பி வீடு வந்து சேர்ந்தவுடன் குளித்துவிட்டுச் சிறிதுநேரம் கடவுளைத் திருமுறைப் பாக்களால் துதித்துவிட்டுத் தமிழ்மறையை எடுத்து வைத்துக்கொண்டு முந்தின நாள் ஓதி நிறுத்தின இடத்தில் இருந்து மேல் உள்ள ஒரு பகுதியை ஓதுவார். இந்தப் பாராயணத் தொழில் சுமார் 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைபெறும்.இவ்வாறு பன்னிரண்டு திருமுறைகளையும் பலதடவை படித்துத் திருப்பி இருக்கிறார். பிறகு எழுதுகோல் எடுத்துக்கொண்டு தாம் காலையில் கண்டு மனத்தில் இருத்தின காட்சிகளிற் சிறந்த ஒன்றைச் சில பாக்களில் எழுதுவார். பெரும்பாலும் நாள்தோறும் நான்கைந்து பாக்கள் எழுதுவதுண்டு. இதுவரை ஆயிரக்கணக்கான பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. பிறகு சிற்றுண்டி அருந்திவிட்டுத் தமது தொழிலுக்குச் செல்லுவார். பகல் வேளையில் தொழில் செய்துவிட்டு மாலையில் வீடு திரும்பினவுடன் சிறிது சிற்றுண்டி அருந்திவிட்டு வெளியே செல்வார். மாலை நேரங்களிலும் தவறாமல் உலாவுவதுண்டு. பெரும்பான்மையான நாள்களில் ஏதாவது ஓர் இடத்தில் பேச்சு இருக்கும். அல்லது தலைமை வகிக்க வேண்டியிருக்கும். அவை இல்லாத நாள்களில் நடத்தலையே உடற்பயிற்சியாக வைத்துக்கொண்டிருப்பார்.

"பெரும்பாலும் இருட்டுவதற்கு முந்தியே வீடு வந்து சேர்ந்திடுவார். சிறிதுநேரம் படித்துவிட்டு உணவு அருந்திவிட்டுத் தம் நாட்குறிப்பு நூலில் அன்று எண்ணினதும் செய்ததும் ஆன குறிப்புகளை எழுதி வைப்பார்.இவ்வாறு எழுதிவைத்த படிகள் முப்பது நாற்பது உண்டு. 1906ஆம் ஆண்டிலும் பிறகு 1912 முதலும் எழுதிவைத்த குறிப்பு நூல்கள் ஒரு பெரிய வரலாறாக அமையும்."

கோவை கிழாரின் அரும்பண்புகள் பல. அவற்றைத் தவத்திரு சாத்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரியினின்று வெளிப்பட்ட நினைவு மலர் தொகுத்துக் கூறுகின்றது: