உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

-

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

நேரில் கண்டும், குறிப்புக்கள் திரட்டியும் ஆராய்ந்தார். இவ் வாராய்ச்சியால் தமிழ்நாட்டு வரலாறு பல விளக்கங்களைப் பெற்றது.

இவர் தாம்பெற்ற அறிவுப் பயனை நாடும் பெறுதல் வேண்டும் என நல்ல நோக்கம் கொண்டார். அதனால் சித்தூர்ப் பெருநிலக்கிழார் ஒருவர் உதவியால் ஒரு பதிப்பகம் தோற்று வித்தார். அதன் சார்பில் 'விவேக திவாகரன்', 'கொங்குவேள்' என்னும் செய்தித் தாள்களை வெளியிட்டுத் தாய்த் தமிழை வளர்த்தார்.

தாமே ஓர் அச்சகம் நிறுவினார். அதன் வழியாக அரிய நூல்கள் சிலவற்றை வெளிப்படுத்தினார். அவற்றுள் கொங்கு நாட்டு ஊர்த்தொகை, அர்த்த நாரீசுவரர் மாலை, செங்கோட்டு மாலை, சிவமலைக் குறவஞ்சி, திருச்செங்கோட்டுப் புராணம், திருச்செங்கோட்டுக் கலம்பகம், திருச்செங்கோட்டுப் பிள்ளைத் தமிழ், பாம்பலங்கார வருக்கக்கோவை முதலிய நூல்கள்

குறிப்பிடத்தக்கவை.

புலவராக விளங்கிய இவர் புலவர்களைப் போற்றுவதி லும், புலவர்களுக்கு உதவுவதிலும் பெரும்பங்குகொண்டார்; தம்மால் இயன்ற பொருளுதவி புரிந்தார். தக்க செல்வர்களிடம் புலவர்களை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி அவரவர்க்கு வேண்டும் உதவிகளை அவ்வப்போது செய்வித்தார். இவ்வாறு புலமைத் தொழிலுடன் வள்ளன்மையாளராகவும் விளங்கியமை இவரைப் புலவர் தோழராக்கி வைத்தது.

இவர்தம் பேருள்ளம் புலவர்களுக்கு உதவுதல் என்னும் அளவுடன் நிற்கவில்லை. தமக்குத் திருச்செங்கோட்டிலிருந்த ஒரு பெரிய மனையைப் பொதுப்பணிக்கு உதவினார். அவ் வீட்டில் நூல்நிலையம் ஒன்றைத் தோற்றுவித்து நன்கொடையாக வழங்கினார். அங்கே 'சைவப் பேரவை' ஒன்றையும் நிறுவினார். அதன் வழியாகச் சைவப் பெரும் புலவர்களாகிய சோமசுந்தர நாயகர், பூவை கலியாண சுந்தர முதலியார், காசிவாசி செந்திநாதையர் முதலியவர்களின் பேருரைகளை அவ் வட்டார் மக்கள் கேட்டுப் பயன்கொள்ள வாய்ப்பு உண்டாயிற்று.

யாழ்ப்பாணத்தில் கதிரை வேற்பிள்ளை என்னும் ஒரு பெரியார் இருந்தார். அவர் சிறந்த நாவலர். அட்டாவதானம் என்னும் கலையிலும் தேர்ந்தவர்.ஒருவர் ஒரு வேளையில் ஒரு செயலைச் செவ்வையாகச் செய்வதே அரிது. அவ்வாறாக ஒரு