உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

சிவநெறியும் செந்தமிழும் ஒருங்கே போற்றிய இப்புலவர்க்கு ஆண்மக்கள் அறுவரும், பெண்மகள் ஒருவரும் ஆக மக்கள் எழுவர் தோன்றினர். நிறை வாழ்நாள் எய்திய இப் பெருமகனார் தம் எண்பத்து ஆறாம் வயதில் 2-11-1944ஆம் நாள் இறைவன் திருவடி யடைந்தார். இவர் தம் அழியாப் புகழுடற் சான்றாகக் கொங்குமண்டல சதகம் முதலாகிய நூல்கள் விளங்குகின்றன.

புலவர் முத்துசாமிக் கோனார் புகழ்மாலையுள் ஒரு மலர் “அம்மை யப்பர் ஆயசெங் குன்றூர் தன்னில் வந்த சத்திய சற்குணன்;

தென்மொழி வடமொழி திகழாந் திரமுதல் பன்மொழிக் கடலும் பருகும் படரிசை

இலக்கண இலக்கியத் தெழுவரம் பிசைத்தோன்;

செப்பிய ஆகமத் திப்பிய பொருளும் சைவசித் தாந்தத் தெய்வநன் னூலைக் கற்றுணர்ந் தடங்கு நற்றவப் பெரியோன்; நங்கோட் டந்தவிர் செங்கோட்டு மான்மியம் ஞானப் பேரொளி ஞான திவாகரன், விரிசடைக் கடவுள் விளக்கமுற் றிலகு வெஞ்சமாக் கூடல் மேதகு புராணம், தெள்ளிய தமிழால் செப்பிய வள்ளல்; திருவா வடுதுறைத் தேசிகன் அன்பாய் வருவாய் நோக்கு மனமகிழ் சீலன்; பூம்பழ னிப்பதி மாம்பழக் கவிஞன் பன்னாள் இருந்து சின்னாள் அறிந்து மெச்சினன் என்று விருதுசில வழங்கும் கோதுபதி யாதவன் சேதுபதி யாதவன் தம்முன் நெடுநாள் வம்மினென் றழைத்தே தள்ளரு நட்பின் சார்புறத் தழுவி உள்ளம் நெக்குருக உரோமம் சிலிர்ப்பப் பேர்பெறும் வரிசைச் சீர்தரப் பெற்றோன்;

அட்டாவ தானத் தரும்புகழ் பெற்ற வித்தக ஞான விவேகமார்

முத்தமிழ் முத்துச் சாமிமொய் தவனே."