உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. புலவரேறு வரதநஞ்சைய பிள்ளை

அரசர்களுக்கு அரசராக விளங்குபவரை 'அரசருள் ஏறு’ என்பர்.ஏறு என்பது சிங்கம், 'பகையரசர்களாகிய யானைகளுக்குச் சிங்கம் போன்றவன்' என்று வீறுமிக்க அரசர்களைக் கூறுவது உண்டு.

“படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு”

என்றார் திருவள்ளுவர்.

புலவர்கள் போற்றும் புலவராக, புலமைத்திறத்தின் உயரெல்லையாக, எதிர்த்து உரையாடுவாரை வெல்லும் ஏற்றமுடையவராக இருப்பவர் புலவரேறு என்று பாராட்டப் பெறுவார். அப் பேறுபெற்ற பெருமகனார் அ. வரதநஞ்சைய பிள்ளை என்னும் பெரும்பெயர்ப் பெரியார் ஆவர்.

,

கொங்குநாட்டுச் சேலத்தைச் சேர்ந்த ஊர் தோரமங்கலம். அவ்வூர்க்குப் பெருமை சேருமாறு பிறந்த பெருமகனார் வரதநஞ்சையர். இவர்தம் தந்தையார் திருப்பெயர் அப்பாசாமிப் பிள்ளை. இவர்தம் தாயார் திருப்பெயர் வரதாம்பாள். இவர்தம் உடன்பிறந்தோர் கந்தசாமிப் பிள்ளை என்பார்.

வரதநஞ்சையர் கி.பி. 1877ஆம் ஆண்டு சூலைத் திங்கள் முதல் நாள் தமிழன்னை செய்த நல்வினையால் தோன்றினார். இவர்தம் முன்னோர் வழிவழியாக ஊர்க்கணக்கு எழுதும் உரிமைத் தொழிலினர். இவர்கள் 'கருணீகர்' எனப் பெறுவர். அருட்பெரு வள்ளலார் இராமலிங்க அடிகளார் பிறந்த குடி இதுவேயாகும். வள்ளலார் ஒளிக்கூறு வரதநஞ்சையரிடத்தும் வாய்த்திருந்தமை வியப்புக்குரியதாம்.

ஆசிரியர்க்கு ஆசிரியராக விளங்கிய வரதநஞ்சையர் எந்த ஓர் ஆசிரியரிடமும் கற்றவர் அல்லர். இவர்தம் தந்தையார் புலமையாளர். ஆதலால் அவர் வழியே சிறிது கற்றார். அவரும் நெடுநாள் வாழ்ந்திலர். உள்ளொளியே உண்மை ஆசிரியராக