உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொங்கு நாட்டுப் புலவர்கள்

135

பாடல்களைப் பாடும்! அவர் இயல்புக்கு ஏற்ற நண்பர்கள் அங்கே வந்து கூடுவர்; பாடுவர்; தையல் நிலையம் ஆராய்ச்சி நிலையமாக மாறும்! இத் தையற்கடைப் பணியாள் ஆனார் இளைஞர் நடேசனார்.

tr

எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும், முத்தர் மனமிருக்கும் மோனத்தே" என்பர் பெரியோர். அது போல், "பொத்தான் துளைபோட்டாலும், பொறியேறி மிதித்தாலும்" நடேசனார் நினைவு தேவார திருப்புகழ்ப் பாடல்களிலேயே தோய்ந்து நின்றது.

திருச்செந்தூர்த் திருப்புகழ்ப் பாடல் ஒன்று "மாய வாடை எனத் தொடங்குகிறது. அப் பாடலில்,

"சீய மாயுரு வங்கொடு வந்தசு

ரேசன் மார்பைஇ டந்துப சுங்குடர்

சேர வாரிய ணிந்தநெ டும்புயல் - மருகோனே”

""

என ஓர் அடி வருகின்றது. அவ்வடியின் பொருளைப் பற்றிய ஆராய்ச்சியில் கவுண்டரும் அவர் நண்பர்களும் இறங்கினர். சொற்களை இப்படியும் அப்படியும் பிரித்துக் 'கிளித் தட்டு' விளையாடுவதுபோல விளையாடினர். ஒருவர்க்கு ஒருவர் மாறுபட்ட பொருள்களும் உரைத்தனர். அந்நிலையில் இளைய நடேசனார் எளிமையாக உரை கூறினார். செம்மையாகப் பிரித்துக் காட்டினார். எப்படி?

"சீயமாய் உருவங்கொண்டு வந்து அசுரேசன் மார்பை இடந்து பசுங்குடர் சேரவாரி அணிந்த நெடும்புயல் மருகோனே”

என்று சொற்களைப் பிரித்தார். பின்னர் இதில் அமைந்துள்ள கதையைக் கூறினார். 'பிரகலாதனுக்காகத் திருமால் நரசிங்க வடிவங் கொண்டு வந்து இரணியன் மார்பைப் பிளந்த கதை இதில் கூறப்பட்டுள்ளது. அத்தகைய திருமாலின் மருமகனே என்று முருகன் குறிக்கப் பெறுகிறான்' என்று கூறினார்.

"நரசிங்கமாக வடிவங்கொண்டு வந்து அசுரர் தலைவனாகிய ரணியனது மார்பைப் பிளந்து அவன் பச்சை ரத்தத்தையும் குடலையும் மொத்தமாக அள்ளி மார்பில் பூசிக் கொண்ட நெடிய கருமேகம் போன்ற திருமாலின் மருமகனே" என்பது இதன் பொருள் என விளக்கினார். இதனைக் கேட்டவர்கள் "நன்று! நன்று! மிகப் பொருத்தமாக உள்ளது" எனப் பாராட்டினர்.